புதிய வரி முறையின் கீழ் ELSS-இல் முதலீடு செய்ய வேண்டுமா?

ELSS ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது புதிய வரி முறையின் கீழ் முதலீடு செய்ய வேண்டுமா?

2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி முறையானது, தனிநபர் வரி செலுத்துநர்களுக்கும் HUF வரி செலுத்துநர்களுக்கும் இரண்டு தெரிவுகளை வழங்குகிறது. (i) குறிப்பிட்ட சில வரிவிலக்கு சலுகைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, வரி விகிதங்களைக் குறைத்துக்கொள்ளலாம், (ii) வரி விலக்கு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அதிக வரி விகிதங்களை ஏற்றுக்கொள்ளலாம் (பழைய வரி முறை). புதிய வரி முறை எல்லோருக்கும் பொருந்தும் எனக் கூற முடியாது. புதிய முறையிலும் பழைய முறையிலும் கிடைக்கும் வரி சேமிப்பைக் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்தே, வரி செலுத்துநர்கள் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டுக் கடன் அல்லது கல்விக் கடன் உள்ளவர்கள், வரி விலக்குள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசி வைத்துள்ளவர்கள், வரி விலக்குகள் மூலம் அதிகம் சேமிக்க வாய்ப்புள்ள, ஆண்டுக்கு 15 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறுவோர் ஆகியோருக்கு பழைய வரி முறையே பொருத்தமானதாக இருக்கும். ஆகவே இப்படிப்பட்ட நபர்கள் பழைய வரி முறையின் கீழ் வரி சேமிப்பைப் பெற ELSS ஃபண்ட்களில் முதலீடு செய்வது பற்றிக் கருத்தில் கொள்ளலாம். பழைய வரி முறையுடன் ஒப்பிடும்போது புதிய வரி முறையானது, வருட இறுதியில் முதலீட்டுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் மிக அதிக அளவிலான ஆவண வேலைப்பாட்டுச் சுமையைக் குறைக்கிறது என்பது உண்மையே. ஆனால் முக்கியமான சில முதலீடு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுப்பதில் பழைய வரி முறை உதவுகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். ELLS, ஓய்வூதியத் திட்டம் அல்லது PPF போன்ற ஏதேனும் ஒரு விதத்தில் வருடாந்திர முறையில் சேமிப்பையோ முதலீட்டையோ தவறாமல் செய்வதற்கு இது உங்களை நிர்ப்பந்திக்கிறது. வரி செலுத்துநர்கள் சிலர் ஏற்கெனவே ELSS ஃபண்ட்களில் SIPகளைக் கொண்டிருக்கலாம். அவர்கள் தங்கள் SIPகளை நிறுத்தும் முன்பு புதிய மற்றும் பழைய வரி முறைகள் இரண்டின் கீழும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வரி ஆதாயங்களைக் கணக்கிட்டு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

எந்த வரி முறை அதிக வரி சேமிப்பைப் பெற உதவும் என்பது முற்றிலும் உங்கள் வருமானம் மற்றும் சம்பள முறையைப் பொறுத்ததா? இரண்டு வரி முறைகளின்படியும் வரிப் பொறுப்புகளை நீங்களாகவே கணக்கிட முடியாவிட்டால், வரி ஆலோசகரிடம் உதவி பெற வேண்டும். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், வரி சேமிப்பை மட்டுமின்றி ஈக்விட்டிகளின் வளர்ச்சி சாத்தியக்கூறையும் அளிக்கின்ற ELSS ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்கப் போதிய தெளிவைப் பெறலாம். உங்களுக்கு புதிய வரி முறையே மிக ஏற்றதாக இருந்தாலும் கூட, வளத்தைப் பெருக்குதல் எனும் நோக்கில் பார்க்கையில் ELSS ஃபண்ட்களில் முதலீடு செய்வது குறித்து நீங்கள் கருத்தில் கொள்ளலாம். நீங்கள் மார்க்கெட் நிலையற்றதாக இருக்கும் சமயங்களில், முதலீடு செய்த பணத்தை எடுத்துவிடலாம் என்று கருதக்கூடியவராக இருந்தால், லாக்-இன் காலம் எனும் கட்டுப்பாடு இருப்பதால் நீங்கள் முதலீட்டை எடுக்காமல் பாதுகாக்கவும், நிலையற்ற மார்க்கெட் ஏற்ற, இறக்கத்தையும் நீங்கள் வெற்றிகரமாக சமாளித்துக் கடக்கவும் உதவியாக இருக்கும். ELSS ஃபண்ட்களின் லாக்-இன் காலம் 3 வருடங்கள் என்பதால், லம்ப்சம் முதலீடாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் இன்று மூதலிடு செய்தால் அதோடு 3 வருடங்கள் கழித்தே பணத்தை எடுக்க முடியும். ஒவ்வொரு SIP பேமெண்ட்டுக்கும் லாக்-இன் காலம் பொருந்தும். 12 மாதங்களும் முதலீடு செய்த மொத்தத் தொகையையும் வித்ட்ரா செய்யவிரும்பினால், கடைசி SIP தவணை 3 வருடங்களை நிறைவு செய்யும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?