தாமதமான முதலீட்டால் ஏற்படும் இழப்பு

தாமதமான முதலீட்டினால் ஏற்படும் இழப்புகள் zoom-icon

குளிர்காலத்தில் உங்களிடம் இருக்கும் ஏர் கண்டிஷனர் (ஏசி) பழுதடைந்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் உங்களுக்கு இது தேவையில்லை என்று கருதி, அதை சரிசெய்வதைத் தள்ளிப்போடுகிறீர்கள். ஆனால் கோடைக்காலம் வந்ததும், வெப்பம் தாங்க முடியாமல் மாறும்போது ஏசியைச் சரிசெய்தே ஆக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இது பீக் டிமாண்டு நேரம், மற்றும் பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநரைக் கண்டுபிடிப்பது சவாலாகவே இருக்கும். இறுதியாக ஒரு டெக்னீஷியன் வரும்போது, அவர் பழுதுபார்ப்பதற்கு அதிக நாட்கள் எடுக்கும் என்றும், அதிக டிமாண்ட் உள்ள, தேவையான மதர்போர்டைப் பெறுவதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான விலை அதிகமாக இருக்கும் என்றும் உங்களுக்குத் தெரிவிக்கிறார்.

உங்களுக்குத் தேவைப்படும்போது, உங்கள் ஏசியைப் பழுதுபார்த்துக்கொள்ளலாம் என அடுத்தடுத்த மாதங்களுக்கு அதனைத் தள்ளிபோடும்போது, அது விலை உயர்ந்த விஷயமாக மாறுகிறது. 

தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் செலவுகளும் இதே முறையில்தான் செயல்படுகிறது. உங்கள் முதலீட்டைத் தாமதப்படுத்துவதன் மூலம், உங்கள் பணத்திலிருந்து வருமானத்தை ஈட்டுவதற்கான திறனை நீங்கள் பெரிதும் தாமதப்படுத்துகிரீர்கள். இது ஒரு தொழிலைத் தொடங்குவது அல்லது பணி ஓய்வுக்காகத் திட்டமிடுவது போன்ற முதலீட்டு இலக்குகளை அடைவதற்கான உங்கள் திறனை தடுக்கலாம். இதனால் வாய்ப்புகளை நீங்கள் தவறவிடக்கூடும் மற்றும் சாத்தியமான லாபத்தை இழக்கக்கூடும்.

தாமதமாக முதலீடு செய்வதால் உண்மையில் ஏற்படக்கூடிய செலவுகள் 

உங்களுக்கு நிதி இலக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளை நோக்கி உடனடியாகச் செயல்படத் தொடங்க வேண்டும். தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய செலவு கணிசமாக இருக்கலாம். கூட்டுவட்டியின் ஆற்றல் உங்களுக்குத் தெரிந்திருந்தால், காலத்திற்கு ஏற்ப உங்கள் முதலீடுகள் நிறைய பணம் சேர்க்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நன்றாகப் புரிந்துகொள்வோம். 

உங்கள் பணி ஓய்வுக்காகத் திட்டமிடுவது மிகவும் முக்கியமானது என்பது உங்களுக்கே தெரியும், மேலும் விரைவில் அதைச் சேமிக்கத் தொடங்க வேண்டும். உங்களுக்கு 27 வயது, உங்கள் ஓய்வு காலத்திற்கு உங்களுக்குப் போதுமான நேரம் இருப்பதாக நினைக்கிறீர்கள். 5,000 மாதாந்திர SIP உடன் உங்களது 30வது வயதில் தொடங்குவதாக முடிவுசெய்கிறீர்கள். இருப்பினும் உங்களுக்கு 30 வயதாகும்போது, புதிய பொறுப்புகள் உருவாகலாம். நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எனவே, நீங்கள் பணி ஓய்வுக்கான திட்டத்தைச் சில வருடங்கள் தள்ளிப் போடுகிறீர்கள். 35 வயதில் நீங்கள் முடிவு செய்து, மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.7,500 முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் கார்பஸ் இப்படித்தான் இருக்கும்: 

 

விவரங்கள்

25 வயதில் தொடங்குதல்

30 வயதில் தொடங்குதல்

35 வயதில் தொடங்குதல்

பணி ஓய்வுக்கான நேரம் (நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்) (அ)

35

30

25

மாதம் முதலீடு செய்யப்பட்ட தொகை (ஆ)

Rs 5,000

Rs 5,000

Rs 7,500

முதலீட்டின் மீது உத்தேசிக்கப்பட்ட ரிட்டர்ன்*

10%

10%

10%

முதலீடு செய்யப்பட்ட தொகை

Rs 21,00,000

Rs 18,00,000

Rs 22,50,000

ரிட்டர்ன்களுடன் திரட்டப்பட்ட மொத்த கார்பஸ் (அபாயங்களுக்கு உட்பட்டது)

Rs 1,89,83,190

Rs 1,13,96,627

Rs 99,51,251

தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்பட்ட செலவு

-

Rs 41,78,748

Rs 90,31,940

*மேலே உள்ள கணக்கீடுகள் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே. முதலீடு செய்யப்பட்ட தொகை ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது: a*b*12. ரிட்டர்னுடன் கூடிய மொத்த கார்பஸ் தாமதச் செலவு கால்குலேட்டரைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டது. 25 வயதிலிருந்து கட்டப்பட்ட மொத்த கார்பஸிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதில் திரட்டப்பட்ட மொத்த கார்பஸைக் கழிப்பதன் மூலம் முதலீட்டைத் தாமதப்படுத்துவதற்கான செலவு தீர்மானிக்கப்படுகிறது.

நீங்கள் பார்க்கிறபடி, உங்கள் மாதாந்திர SIP-ஐ அதிகரித்தாலும், தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் செலவு மிக அதிகம். SIP உடன் இறுதித் தொகையை ஈடு செய்ய 25 வயதில் ரூ 5,000 முதலீடு செய்தால், நீங்கள் 35வது வயதில் தொடங்கும்போது ஒவ்வொரு மாதமும் ரூ14,300 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீட்டை சில வருடங்கள் தாமதப்படுத்துவதால் ஏற்படும் செலவு அதிகம்தானே? 

தாமதச் செலவு கால்குலேட்டரைப் பயன்படுத்தி, உங்கள் முதலீடுகளைத் தாமதப்படுத்தினால், எவ்வளவு பணத்தை இழக்க நேரிடும் என்பதை நீங்கள் மதிப்பிடலாம். 

ஏன் முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்?

1. நேரம் உங்களிடமே உள்ளது
முன்கூட்டியே முதலீடு செய்வது உங்களுக்கு நேரத்தைச் சாதகமாக வழங்குகிறது. உங்கள் முதலீடுகள் எவ்வளவு காலம் வைத்திருக்கிறதோ, அவ்வளவு காலம் அவை வளர்ந்து ரிட்டர்ன்களைக் குவிக்கும். அதாவது ஆரம்பத்தில் செய்யப்பட்ட சிறிய முதலீடுகள் கூட காலப்போக்கில் குறிப்பிடத்தக்க செல்வத்தைக் குவிப்பதற்கான திறனைக் கொண்டுள்ளன.

2. கூட்டுவட்டி
முன்கூட்டியே முதலீடு செய்வது கூட்டு வட்டியின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. கூட்டுவட்டி என்பது உங்கள் முதலீட்டு ரிட்டர்ன் மீண்டும் முதலீடு செய்யப்பட்டு அதன் மீதும் ரிட்டர்னை உருவாக்குவதாகும். காலப்போக்கில், கூட்டு வட்டியின் ஆற்றல் உங்கள் முதலீடுகளில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

3. அதிக முதலீட்டு விருப்பங்கள்
முன்கூட்டியே முதலீடு செய்வது வெவ்வேறு முதலீட்டு விருப்பங்கள் மற்றும் உத்திகளை ஆராய அதிக நேரத்தை வழங்குகிறது. ஒரு ஆப்சன் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் உத்தியை மாற்றலாம்.

4. நீண்ட கால இலக்குகளை அடைதல்
முன்கூட்டியே முதலீடு செய்வது ஓய்வூதியம், வீடு வாங்குவது அல்லது குழந்தையின் கல்விக்கு நிதியளிப்பது போன்ற நீண்ட கால இலக்குகளை நோக்கிச் செயல்பட உதவுகிறது. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு நேரம் சிக்கீரம் இந்த இலக்குகளை அடைவதற்கான ஆதாரங்களை உருவாக்குவதற்கான நேரம் கிடைத்திடும்.

முடிவுரை 
தாமதமான முதலீடுகளுக்கான செலவு கணிசமானதாக இருக்கலாம் மற்றும் உங்கள் நீண்ட கால நிதி இலக்குகளுக்கு இடையூறாக இருக்கலாம். நீங்கள் SIP மூலமாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்த தொகையாகவோ முதலீடு செய்தாலும், கூடிய விரைவில் தொடங்குவது உங்கள் இலக்குகளை அடைய உதவும். தயாரிப்பு/திட்டம் உங்களுக்குப் பொருத்தமானதா என்பதைக் கண்டறிய, மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரை அணுகலாம்.


பொறுப்புதுறப்பு 
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பல்வேறு வகைகள் பற்றி AMFI இணையதளத்தில் உள்ள தகவலானது, ஒரு நிதித் தயாரிப்பு வகை என்ற வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. விற்பனைக்காகவோ விளம்பரத்திற்காகவோ வணிக எதிர்பார்ப்பிலோ வழங்கப்படவில்லை. 

இதிலுள்ள உள்ளடக்கம், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் தகவல் ஆதாரங்கள், நம்பகமானது என்று நம்பக்கூடிய வகையிலான பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் AMFI உருவாக்கியது. எனினும், அத்தகைய தகவலின் துல்லியத்திற்கு AMFI உத்தரவாதம் அளிக்காது, அந்தத் தகவல் மாறாது என்றும் உறுதியளிக்காது. 

இதிலுள்ள உள்ளடக்கமானது, தனிப்பட்ட ஒரு முதலீட்டாளரின் நோக்கங்கள், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வம் அல்லது நிதி சார்ந்த தேவைகள்/சூழல்கள் அல்லது இங்கு விவரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் அவருக்குப் பொருந்தும் தன்மை போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்படவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் இது குறித்து முதலீட்டு ஆலோசனை பெற, தங்களது தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்/நிபுணர்/வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.   

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் என்பது டெபாசிட் செய்யும் தயாரிப்பல்ல, இவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது அதன் AMC-இன் பொறுப்பல்ல, மேலும் இவை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, காப்பீடும் வழங்குவதில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்பில் உள்ள முதலீடுகளின் தன்மையின் காரணமாக, அதன் ரிட்டர்ன்கள் அல்லது சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது. இதுவரையான பெர்ஃபார்மன்ஸ் பற்றிய தகவல் கொடுக்கப்படும்போது, அது முழுக்க முழுக்க தகவல் தேவைக்காக மட்டும்தானே தவிர, அது எதிர்கால பலன்களுக்கான உத்தரவாதமல்ல.

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
 

 

285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?