உங்கள் முதலீட்டை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு, நீங்கள் அமைக்கும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உங்கள் பங்களிப்பை தானாகவே அதிகரிக்கும் அம்சத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
ஸ்டெப்-அப் SIP மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.
ஸ்டெப்-அப் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP): ஸ்டெப்-அப் SIP நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் தொகையை நீங்கள் ஏற்கனவே அமைத்த சதவீதத்தின் அடிப்படையில் தானாகவே அதிகரிக்கும். நீண்ட கால முதலீட்டுக்கு உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்டெப்-அப் SIPஐத் தொடங்குங்கள்.
ஸ்டெப்-அப் SIP-க்கான உதாரணம்: நீங்கள் ₹20,000 என்ற தொகையுடன் SIP-ஐத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு வருடமும் SIP-ஐ 10% நீங்கள் அதிகரிக்கத் திட்டமிடுகிறீர்கள். அதற்கு ஸ்டெப்-அப் எப்படி வேலை செய்யும் என்பதை இப்போது பார்க்கலாம்:
வருடம் 1: ₹20,000 இல் நீங்கள் தொடங்குகிறீர்கள்.
வருடம் 2: SIP-ஐ 10% அதிகரிக்கிறீர்கள், ஆகவே ₹2,000 அதிகரித்து ₹22,000 ஆகிறது.
வருடம் 3: மேலும் 10% அதிகரிக்கிறீர்கள், இப்போது ₹2,200 அதிகரித்து ₹24,200 ஆகிறது.
ஆகவே, முதல் வருடத்தில் உங்கள் SIP தொகை ₹20,000, இரண்டாவது வருடத்தில் ₹22,000, மூன்றாவது வருடத்தில் ₹24,200 என்று இருக்கும்.
இப்போது உங்கள் SIP-ஐ ஸ்டெப்-அப் முறையில் ஏன் அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
SIP-ஐ இப்படி படிப்படியாக அதிகரிக்கும் போது:
> உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது உங்கள் முதலீட்டையும் நீங்கள் அதிகரிக்கலாம்.
> பணவீக்க விகிதம் மற்றும் விலை ஏற்றங்களால் உங்கள் சேமிப்புகள் பாதிக்கப்படாதபடி பாதுகாக்கலாம்.
> கூடுதல் பங்களிப்புகளின் மூலம் உங்கள் செல்வத்தை விரைவாகப் பெருக்கலாம்.
> உங்கள் மாறுகின்ற நிதி இலக்குகளுக்கு ஏற்ற வகையில் உங்கள் முதலீடுகளை சரிசெய்யலாம்.
> தொடர்ச்சியாக பங்களிப்புகளின் மூலம் ஒழுக்கமான சேமிப்புப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
> உங்கள் முதலீடுகளை எளிதாக நிர்வகிக்கலாம், தேவைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளலாம்.
ஸ்டெப்-அப் SIP-ஐத் தொடங்குவதற்கான வழிமுறை:
படி 1: உங்கள் தொடக்க முதலீட்டையும் வருடந்தோறும் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள்.
படி 2: நீங்கள் தேர்வுசெய்த மியூச்சுவல் ஃபண்டில் ஸ்டெப்-அப் SIP-ஐ அமையுங்கள்
படி 4: திட்டமிட்டபடி தொடர்ச்சியாக பங்களிப்புகளைச் செய்யுங்கள்
படி 5: உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதை உறுதிப்படுத்திக்கொள்ள, அவ்வப்போது உங்கள் SIP-ஐ ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.
ஆகவே, வருமானத்தை அதிகரிப்பதற்கு ஸ்டெப்-அப் SIP மிகச் சிறந்த வழியாகும். இதன் மூலம் உங்கள் முதலீடுகளை படிப்படியாக அதிகரித்து வலிமையான ஃபினான்ஷியல் அசெட்டாக மாற்றுகிறீர்கள், ஒரு சிறிய விதை படிப்படியாக வளர்ந்து பிரம்மாண்டமான ஆலமரம் ஆவதைப் போல!
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.