டைனமிக் பாண்டு ஃபண்ட்கள் என்பவை முதலீட்டுக் கால அளவை நிர்வகிப்பதில் நெகிழ்த்தன்மை கொண்ட ஒரு வகை டெப்ட் ஃபண்ட்களாகும். பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களில் ஏற்படும் அதிகரிப்புகளை, ரிட்டர்ன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்வதே இவற்றின் முதன்மையான நோக்கமாகும். நடைமுறையில் உள்ள வட்டி விகிதப் போக்குகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளின் கால அளவுகளை துரிதமாக தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் ஃபண்ட் மேனேஜர்கள் இதைச் செய்கின்றனர். மார்க்கெட்டின் மாற்றங்கள் மற்றும் வட்டிவிகித மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான பாண்டுகள், மெச்சூரிட்டிகள் மற்றும் கிரெடிட் பண்புகளுக்கு இடையே மாறக்கூடிய தன்மை டைனமிக் பாண்டு ஃபண்டுக்கு உள்ளது.
மேலும், வட்டி விகிதங்களைப் பற்றிய ஃபண்ட் மேனேஜரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப டைனமிக் பாண்டு ஃபண்ட்கள் தங்களது போர்ட்ஃபோலியோவின் கால அளவை மாற்றிக்கொள்ளும். இந்த மாற்றங்களின் காரணமாக புரொஃபைல்களின் கால அளவு நீட்டிக்கப்பட்டு, மாறக்கூடிய குறுகிய கால செயல்திறன் கிடைக்கிறது. எனினும், நீண்ட காலவாக்கில், இந்த ஃபண்ட்கள் பல்வேறு வட்டி விகித சுழற்சிகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும், இதனால் ஒப்பீட்டில் அதிக ரிட்டர்ன்களை வழங்குகின்றன. டைனமிக் பாண்டுகளை அவற்றின் முதன்மையான பண்புகளைக் கொண்டு நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
ரிஸ்க்: டைனமிக் பாண்டுகள் பொதுவாக ‘நடுத்தரமான ரிஸ்க் கொண்டவை’ என்ற வகையின்கீழ் வரும்.
வட்டி விகிதங்கள்: பாண்டு விலைகள் வட்டி விகிதங்களுக்கு எதிர்விகிதத்தில் மாறும்; பல சமயங்களில் விகிதங்கள் அதிகரிக்கும்போது பாண்டு விலைகள் குறையும், குறையும்போது பாண்டு விலைகள் அதிகரிக்கும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.