எல்லா மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களிலும் பின்வரும் செய்தியைக் காணமுடியும்: “திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.” இந்த ஆவணங்கள் என்னென்ன?
3 முக்கியமான ஆவணங்கள் உள்ளன: முக்கியத் தகவல் ஆவணம் (KIM), திட்டத் தகவல் ஆவணம் (SID) மற்றும் கூடுதல் தகவல் அறிக்கை (SAI).
சொத்து மேலாண்மை நிறுவனத்தால் (AMC) இவை ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றி தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியாவுக்கு (SEBI) சமர்ப்பிக்கப்படும்.
SID பின்வருவன போன்ற தகவலைக் கொண்டிருக்கும்:
- முதலீட்டு நோக்கம் மற்றும் கொள்கைகள், சொத்து ஒதுக்கீட்டு வடிவம், கட்டணங்கள் மற்றும் பணமாக்குதல் விதிகள் போன்ற அனைத்து அடிப்படை அம்சங்கள்.
- நிதி மேலாண்மைக்