கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும் வருடாந்தர வளர்ச்சி விகிதமே (CAGR) பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவீடாக உள்ளது. ஏனெனில் இது தான் ஒரு முதலீட்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் ரிட்டர்ன் எவ்வளவு என்பதை சரியாகக் கணக்கிட்டுக் கூறுகிறது. அப்சல்யூட் ரிட்டர்ன் கணக்கீடோ, முதலீட்டுக்கு எவ்வளவு காலம் ஆனது என்பதைக் கணக்கில் கொள்ளாமல், ஆரம்ப மதிப்புக்கும் கடைசி மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து ரிட்டர்னைக் கணக்கிடுகிறது.
CAGR கணக்கீடானது, ஆரம்பத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை, இறுதியில் அதன் மதிப்பு மற்றும் அதற்கு ஆன கால அளவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, ஒரு முதலீட்டில் பல்வேறு அசட் வகைகளில் ரிட்டர்ன்ஸை ஒப்பிட உதவுகிறது
மேலும் வாசிக்க