விளக்கம்: மியூச்சுவல் ஃபண்டு மற்றும் SIP
மியூச்சுவல் ஃபண்டு என்பது ஒரு நிதித் தயாரிப்பு, SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு முறை. நீங்கள் SIP முறையைத் தேர்வுசெய்யும்போது, மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள்.
மியூச்சுவல் ஃபண்டு மற்றும் SIPகளில் முதலீடு செய்வது எப்படி உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்பதைக் கண்டறியலாம்
மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன?
ஒரு மியூச்சுவல் ஃபண்டில், பல முதலீட்டாளர்கள், பங்குகள், பாண்டுகள், பிற செக்யூரிட்டிகள் போன்ற அசெட்டுகளில் முதலீடு செய்ய தங்களின் பணத்தைச் சேர்த்திருப்பர். அனுபவமிக்க ஃபண்டு மேனேஜர்கள் அந்தப் பணத்தைக் கவனிப்பார்கள். எனினும், இந்தத் தொழில்முறை மேலாண்மை மற்றும் நிபுணத்துவத்திற்குத் தொடர்புடைய கட்டணங்கள் பெறப்படலாம். இந்தக் கட்டணங்கள் வழக்கமாக ஃபண்டு நிர்வகிக்கும் மொத்த அசெட்டுகளின் சிறிய சதவீதமாக இருக்கும். இது ஃபண்டில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன்களில் இருந்து கழிக்கப்படும். முதலீடு செய்பவராக, ஃபண்டின் மொத்த அசெட்டுகளின் ஒரு பகுதியாக விளங்கும் யூனிட்டுகள் உங்களுக்குச் சொந்தமாக இருக்கும். இந்த யூனிட்டுகளின் நிகர அசெட் மதிப்பு, அடிப்படையான செக்யூரிட்டிகளின் சந்தை செயல்திறனைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு இருக்கும் இரண்டு வழிகள்:
1. லம்ப்-சம் முறை: உங்களிடம் உபரிப் பணம் இருக்கும்போதெல்லாம் ஒரு ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் சேமிக்கலாம். முதலீடு செய்வதற்கு அதிகபட்சத் தொகைக்கான எந்தவொரு வரம்பும் இல்லை. லம்ப்-சம் முதலீடுகளுக்கான குறைந்தபட்சத் தொகை பெரும்பாலும் ரூ.500 இல் இருந்து தொடங்குகிறது.
2. SIPகள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்): SIP மூலம், மிகக் குறைந்தபட்சம் ரூ.100- முதல் சீரான இடைவெளியில் நீங்கள் சேமிக்கத் தொடங்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்களில் மியூச்சுவல் ஃபண்டின் நிகர அசெட் மதிப்புக்குச் (NAV) சமமான யூனிட்டுகள் உங்களுக்கு ஒதுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட தேதியில் மியூச்சுவல் ஃபண்டின் ஒரு யூனிட்டின் சந்தை மதிப்பை NAV முக்கியமாக விளக்குகிறது.
SIPகள் மூலம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
1. ரூப்பி-காஸ்ட் ஆவரேஜிங்
ஒரு சீரான இடைவெளியில் தீர்மானிக்கப்பட்ட தொகையில் மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகளை சந்தை இறக்கத்தில் இருக்கும்போது அதிகமாகவும், சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது குறைவாகவும் நீங்கள் வாங்குகிறீர்கள், இதில் உங்கள் முதலீட்டுச் செலவிட்ட தொகைக்குச் சராசரி பார்க்கவும். இதுதான், ரூப்பி-காஸ்ட் ஆவரேஜிங்.
2. சிறிய அளவில் தொடங்குங்கள்
நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து இல்லாமல், SIP-இல் அனைவரும் சேரலாம். ஒரு மாதத்தில் ரூ.500 என்ற அளவில் தொடங்கினாலும் காலப்போக்கில் அற்புதமான ரிட்டர்ன்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு திட்டத்திற்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் குறைந்தபட்சத் தொகை வேறுபடும்.
3. நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாடு
உங்கள் நிதிச் சூழல்களுக்கு ஏற்ப முதலீட்டுத் தொகை மற்றும் கால இடைவெளியைத் தேர்வுசெய்யும் வாய்ப்பை SIP வழங்குகிறது. பங்களிப்புகளை நீங்கள் அதிகரிக்கலாம், இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம்.
4. கூட்டுவட்டியின் ஆற்றல்
நீண்டகாலத்திற்கு நீங்கள் முதலீடு செய்தால், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு உங்கள் பணம் பெருகி கூட்டுவட்டி ஆற்றலின் பலன்களை வழங்கும்.
5. முறையான முதலீட்டுப் பழக்கம்
முறையான முதலீட்டு உத்தியை வளர்த்துக்கொள்ள SIP உங்களுக்கு உதவுகிறது. வெவ்வேறு நிதி இலக்குகளுக்கு பல்வேறு SIPகளை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் வழிகள்
நேரடி முதலீடு: மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் மூலம் நீங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம். அதாவது, ஃபண்டுகளைத் தேர்வுசெய்வதில் இருந்து முதலீடு செய்வது வரையிலான ஒட்டுமொத்த முதலீட்டுச் செயல்முறையின் கட்டணங்களை நீங்களே பார்த்துக்கொள்வீர்கள். இடைத் தரகர்களின் ஈடுபாடு இல்லையென்பதால் குறைவான கட்டணமே இதற்கு ஆகும்.
விநியோகஸ்தர் முதலீடு: ஒரு விநியோகஸ்தர் மூலம் நீங்கள் முதலீடு செய்யத் தேர்வுசெய்தால், ஒரு நிதி ஆலோசகர் அல்லது இடைத்தரகர் போன்ற ஒரு மத்தியஸ்தர் உடன் நீங்கள் பணியாற்றுகிறீர்கள். பொருத்தமான ஃபண்டுகளைத் தேர்வுசெய்வதிலும் தொழில்நுட்ப விஷயங்களிலும் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். எனினும், விநியோகஸ்தர் சேவைகள் காரணமாக இந்த முறையில் கட்டணங்கள் இருக்கலாம்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.