டெப்ட் ஃபண்ட்கள், உங்கள் பணத்தை,தொடர்ச்சியாக வட்டியை தருவதற்கு உறுதியளிக்கின்ற பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் போன்ற வட்டியைத் தாங்கி வரும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும்.ஃபண்டிற்கு கிடைக்கும் வட்டிப பணம்என்பது, ஒரு முதலீட்டாளராக நாம் பெறக்கூடிய மொத்த ரிட்டர்ன்களுக்கு பங்களித்திடும்.சந்தையில் வட்டி வீதங்களில் மாறுபாடு ஏற்படும் போது, பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளின் விலைகளும் மாறும். ஆனால் அந்த மாற்றம் எதிர்த்திசையில் இருக்கும்.வட்டி வீதங்கள் அதிகரிக்கும் போது, இந்தச் சொத்து வகைகளின் விலைகள் குறையும் மற்றும் வட்டி வீதங்கள் குறையும் போது, இந்தச் சொத்து வகைகளின் விலைகள் அதிகரித்திடும்.இவ்வாறு, இந்த செக்யூரிட்டிகளின் விலைகள் மாறும்போது டெப்ட் ஃபண்ட்களின் NAVகளும் மாறும்.NAV-யில் ஏற்படும் மாற்றங்கள், இந்த ஃபண்டின் மூலம் உருவாக்கப்படும் மொத்த ரிட்டர்னின் மீது தாக்கத்தை ஏற்படுத்திடும்.
வட்டி வீத மாற்றங்களைத் தவிர, பாண்டுகளின் கிரெடிட் ரேட்டிங்கில் ஏற்படும் மாற்றங்களும் டெப்ட் ஃபண்ட்களின் ரிட்டர்ன்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திடும்.கிரெடிட் ரேட்டிங்குகள், பாண்டு வழங்குனர்களின் கிரெடிட் நம்பகத்தன்மையைக் குறிக்கின்றன.ரேட்டிங் குறைந்தால், இந்த பாண்டுகளின் விலைகளும் குறைந்திடும்.இதன் விளைவாக இந்த பாண்டுகளை வைத்திருக்கக் கூடிய ஃபண்டுகள் NAV-யைக் குறைக்க வேண்டிய அவசியம் நேரும்.இவ்வாறு, டெப்ட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளின் கிரெடிட் ரேட்டிங் குறைந்தால், அது உங்கள் ரிட்டர்னை குறைத்திடும்.
பணம் திரும்ப வராத ரிஸ்க் அதிகரிப்பு அல்லது பாண்டு வழங்குனரால் வட்டி அல்லது ரிட்டர்ன் வழங்கப்படாமல் போகும் வாய்ப்புகள் ஆகியவை டெப்ட் ஃபண்ட்களின் ரிட்டர்ன்களை பெருமளவு பாதிக்கும். ஏனென்றால், வட்டிப் பணச்செலுத்துதல்கள் ஃபண்டில் இருந்து கிடைக்கும் மொத்த ரிட்டர்னுடன் சேர்க்கப்படும்.