பணவீக்கம் என்றால் என்ன?

Video

எளிமையான மொழியில் கூற வேண்டுமானால், பணவீக்கம் என்பது கிடைக்கபெறும் பணத்துடன் ஒப்பிடும்போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வு. வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஒரு பொருளை இப்போது நீங்கள் வாங்கும் போது அதன் விலை அதிகரித்திருக்கலாம்.

இதனை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு நாம் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ரூ 100 கொடுத்து ஒரு கிரில்டு சாண்ட்விச் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வருடாந்திர பணவீக்கம் 10%. அடுத்த வருடம், அதே சாண்ட்விச்சுக்கு நீங்கள் ரூ. 110 கொடுக்க வேண்டியிருக்கும். பணவீக்கத்துக்கு ஏற்ப உங்கள் வருமானமும் போதுமான அளவில் உயராது என்றால், உங்களால் சாண்ட்விச் அல்லது பிற பொருட்களை வாங்க முடியாது, இல்லையா?

நடப்பு/தற்போதைய வாழ்க்கைத் தரநிலையைப் பராமரிப்பதற்கு, தங்களின் முதலீட்டில் இருந்து எவ்வளவு ரிட்டர்ன் (%) தேவை என்பதையும் இந்தப் பணவீக்கம் முதலீட்டாளர்களுக்குக் கூறிடும். உதாரணத்திற்கு, ‘X’ முதலீட்டில் இருந்து 4% ரிட்டர்ன் பெறப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம் மற்றும் பணவீக்கம் 5% ஆக உள்ளது என்றால், முதலீட்டின் மீதான உண்மையான ரிட்டர்ன் -1% (5%-4%).

பணவீக்கத்தைச் சமாளிக்கக்கூடிய சாத்தியமுள்ள முதலீட்டுத் தேர்வுகளை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்கு வழங்கிடும்! சரியான வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதன் மூலம், உங்களின் நீண்டகால வாங்கும் சக்தியைப் பாதுகாப்பதை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?