மியூச்சுவல் ஃபண்டுகளில் லிக்விடிட்டி: பல நபர்கள் தங்கள் பணத்தை எல்லாம் ஒன்றாக சேர்த்து அந்த பணத்தை ஃபண்டு மேனேஜர் ஸ்டாக்குகள், பாண்டுகள் அல்லது பிற அசெட்டுகளில் முதலீடு செய்கின்ற ஒரு முறையே மியூச்சுவல் ஃபண்டு ஆகும். ஒரு மியூச்சுவல் ஃபண்டிலிருந்து பணத்தை வெளியே எடுப்பது எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்பது, அந்த ஃபண்டு முதலீடு செய்துள்ள அசெட்டுகளை வாங்குவது அல்லது விற்பது எந்த அளவுக்கு சுலபமாக இருக்கிறது என்பதைப் பொறுத்ததாகும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்டு பிரபலமான ஸ்டாக்குகள் அல்லது அரசாங்க பாண்டுகள் போன்ற சுலபமாக வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய செக்யூரிட்டிகளில் முதலீடு செய்தால், அது அதிக லிக்விடிட்டி கொண்டது என்று கருதப்படும். இருந்தாலும் அடிக்கடி வர்த்தகம் செய்யப்படாத அசெட்டுகளில் அந்த ஃபண்டு முதலீடு செய்தால், நீங்கள் ரிடீம் செய்யும்போது மீண்டும் உங்கள் பணத்தைப் பெறுவதற்கு அதிகக் காலம் எடுக்கலாம்.
கூடுதலாக, மியூச்சுவல் ஃபண்டின் லிக்விடிட்டி முதலீட்டுத் தெரிவுகளை எப்படி பாதிக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்:
குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகள்: நீங்கள் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யத் திட்டமிட்டால் அதிக லிக்விடிட்டி கொண்ட அசெட்டுகளே அதற்கு சிறந்தவை, ஏனெனில் அவற்றை விரைவாக விற்க முடியும். நீண்ட கால முதலீடுகளுக்கு, மார்க்கெட் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் நீண்ட கால அளவில் சாத்தியமான வளர்ச்சியை அடைவதிலேயே கவனம் செலுத்தி முதலீட்டாளர்கள் தங்கள் அசெட்டுகளை அப்படியே வைத்திருப்பார்கள் என்பதால் லிக்விடிட்டி என்பது அவர்களுக்கு அந்த அளவுக்கு முன்னுரிமையான விஷயமாக இல்லாமல் போகலாம்.
ரிஸ்க்கை நிர்வகித்தல்: உங்களுக்கு ரிஸ்க் குறைவாக இருக்கவேண்டும் என்றால் அதிக லிக்விடிட்டி கொண்ட அசெட்டுகள் உங்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும், ஏனெனில் அவற்றுக்கான தேவை பொதுவாக எப்போதும் அதிகமாக இருக்கும், மேலும் அவற்றின் ஏற்ற இறக்கம் குறைவாகவே இருக்கும். குறைவான லிக்விடிட்டி கொண்ட அசெட்டுகள் ரிஸ்க் அதிகம் கொண்டவை, ஏனெனில் அவற்றின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும், மேலும் அவற்றை விற்கும்போது அதற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும்.
அவசர சூழ்நிலைகளைக் கையாளுதல்: அதிக லிக்விடிட்டி கொண்ட அசெட்டுகளை விரைவாக சுலபமாக விற்க முடியும், ஆகவே அவசர சூழ்நிலைகளுக்குப் பயன்பட அவை ஏற்றவையாக உள்ளன. குறைவான லிக்விடிட்டி கொண்ட அசெட்டுகளை விற்பதற்கு அதிக நாட்கள் ஆகும், ஆகவே உடனடியாக பணம் தேவைப்படும் சூழ்நிலைகளில் இது உங்களுக்கு பிரச்சனை ஆகலாம்.
அதுமட்டுமின்றி, லிக்விடிட்டி ரிஸ்க் என்பது முதலீட்டாளர் தனது முதலீட்டை சுலபமாக பணமாக மாற்ற முடியாமல் போகும் சூழ்நிலையைக் குறிக்கிறது
ஆகவே ஒரு முதலீட்டை நீங்கள் எந்த அளவுக்கு சுலபமாக பணமாக மாற்ற முடிகிறது என்பதை லிக்விடிட்டி பெரிதும் பாதிக்கிறது, அதோடு ஒரு போர்ட்ஃபோலியோவின் பொதுவான ரிஸ்க் மற்றும் ரிட்டர்னையும் பாதிக்கிறது, ஆகவே லிக்விடிட்டி என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.