2 அல்லது அதற்கு அதிகமான தவணைகளைக் கட்டத் தவறினால் மியூச்சுவல் ஃபண்டுகள் என்ன செய்யும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ஒன்றிரண்டு தவணைகளை நான் கட்டத் தவறிவிட்டால் என்ன ஆகும்?

வழக்கமான முதலீடுகளாக மற்றும்/அல்லது ஒட்டுமொத்தத் தொகையாக உங்களால் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யமுடியும். ஆரம்பக் கட்டத்திலேயே நீங்கள் எவ்வளவு கால இடைவெளியில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். தினசரி/வாராந்திர/மாதாந்திர இடைவெளிகளில் தொகையைச் செலுத்துவதற்கு, நீங்கள் SIP மூலம் உங்கள் முதலீடுகளை ஆட்டோமேட் செய்து கொள்ளலாம்.

இந்த ஆட்டோமேஷனை பின்தேதியிட்ட காசோலைகள் மூலம் அல்லது வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் (மின்னணுப் பற்று) மூலம் செய்யமுடியும். “டைரக்ட் டெபிட் (நேரடிப் பற்று)” வசதி அல்லது NACH (நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ்) மூலம் நீங்கள் ஆட்டோ டெபிட்டை அமைத்துக் கொள்ளலாம். இந்தச் செயலாக்கத்தை செய்வதற்காக சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன.

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் புது படிவத்தை நிரப்பும் சிரமமோ அல்லது எந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பமோ உங்களுக்கு இருக்காது. ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்துக்கு நீங்கள் SIP -ஐ அமைத்துக் கொள்ளலாம். உங்கள் கணக்கில் போதுமான நிதி இருப்பதை மட்டும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

கேள்விக்கு பதில் கிடைக்கப் போகிறது. நீங்கள் இரண்டு அல்லது மூன்று தவணைகளைத் தொடர்ந்து கட்டத் தவறிவிட்டால், பின்தேதியிட்ட காசோலைகளை டெபாசிட் செய்வதை நிறுத்திவிட்டு, பயன்படுத்தப்படாத அனைத்து காசோலைகளையும் ஃபண்ட் ஹவுஸ் உங்களுக்குத் திரும்பி அனுப்பிவிடும் அல்லது உங்கள் கணக்கில் இருந்து டெபிட் (பற்று) செய்வதை நிறுத்திவிடும். இதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது மற்றும் திட்டமும் பறிமுதல் செய்யப்படாது.

எந்த சமயத்திலும், அதே கணக்கில் இருந்து நீங்கள் உங்கள் SIP -ஐ மீண்டும் தொடங்கமுடியும்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?