இன்டெக்ஸ் ஃபண்ட்கள் என்பவை, குறிப்பிட்ட பங்குச் சந்தை இன்டெக்ஸ்களின் (BSE சென்செக்ஸ், நிஃப்டி 50, நிஃப்டி மிட்கேப் இன்டெக்ஸ் போன்றவை) செயல்திறனைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களாகும். இன்டெக்ஸின் காம்போசிஷனை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் செக்யூரிட்டிஸ் போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பதன் மூலம் குறிப்பிட்ட பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ்களின் முதலீட்டு ரிட்டர்ன்களைப் போலவே ரிட்டர்ன்களை வரவைப்பதை இவை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனால் இன்டெக்ஸ் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்ய வேண்டும்?
இந்த ஃபண்ட்கள் குறிப்பிட்ட மார்க்கெட் இன்டெக்ஸையே பிரதிபலிப்பதால், ஈக்விட்டி தொடர்பான ரிஸ்க்குகளால் இவை பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு. ஆகவே ஒப்பீட்டில் அதிகம் ரிஸ்க்கை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்கள் சிறந்த முதலீட்டுத் தெரிவாக இருக்கும்.
மேலும் வாசிக்க285