ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டில் ஏன் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும்?

ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டில்  ஏன் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டானது (ஒரு மியூச்சுவல் ஃபண்டு வகை) நிதியின் சொத்து ஒதுக்கீடு, SEBI அனுமதிக்கக்கூடிய வழிகாட்டுதல்கள் மற்றும் வரம்புகள் ஆகியவற்றின்படி கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள், பணச் சந்தைப் பத்திரங்கள், பிற கடன் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானம் பெற்றுத் தரக்கூடிய சொத்துகளில் முதலீடுகளை ஒதுக்கீடு செய்கிறது. வட்டி, மூலதன வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் ரிட்டர்ன்களை பெறுவதை அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வசதி வெவ்வேறு முதலீட்டு நோக்கங்களுக்கும் ரிஸ்க் நிலைகளுக்கும் பொருந்துகிறது. கடன் அல்லது பத்திர நிதிகள் எனவும் ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகள் அழைக்கப்படுகின்றன.

ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகள், பின்வருபவை போன்ற எண்ணற்ற அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன:

  • டைவர்சிஃபிகேஷன்: அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானத்திற்கான பல்வேறு பத்திரங்களுக்கு முதலீடுகளைப் பிரித்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் பலவிதங்களில் முதலீடு செய்யும் வசதியை இந்த ஃபண்டுகள் வழங்குவதுடன் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ ரிஸ்க்கையும் குறைக்கின்றன.
  • லிக்விடிட்டி: ஓபன் எண்டட் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள் எந்தவித லாக்-இன் கால வரம்பும் இல்லாததால், அவை உடனடியாகப் பணத்தைப் பெற வழி செய்கின்றன, இது குறிப்பாக அவசர நிதித் தேவைகளின்போது பேருதவி செய்கிறது
  • ஒப்பீட்டு அளவில் குறைந்த ரிஸ்க்குகள்: இந்த ஃபண்டுகளின் அபாயம் குறைவானது முதல் நடுத்தரமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இதில் ரிஸ்க் உள்ளது.
  • கூடுதல் வருமானம்: ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள் குறிப்பாக, பணம் பெறுவதற்கான முறையான திட்டங்களின் மூலம் கூடுதல் வருமானத்தை வழங்கக்கூடும், இது நிர்வாகக் கட்டணங்களுக்கு உட்பட்டது. இந்த ஃபண்டுகள் உங்கள் முதன்மை வருமானத்தை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த நிதிநிலையை மேம்படுத்துகின்றன.
  • ஓய்வுகாலத்தைத் திட்டமிடுதல்: சந்தை அபாயங்கள் மற்றும் ஃபண்டின் செயல்திறனுக்கு உட்பட்டு, பணம் பெறுவதற்கான முறையான திட்டங்கள் மூலம் பணிக்காலத்திற்குப் பிந்தைய காலங்களில் குறைந்த ரிஸ்க் கொண்ட குறைந்த ரிட்டர்ன் வருமானத்தைத் திட்டமிட, இந்த ஃபண்டுகள் ஓய்வுகாலத்தைத் திட்டமிடுவதற்கான முக்கியக் காரணியாகச் செயல்படுகின்றன.

ரிஸ்க்கைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகள் பொருத்தமானவையாகும். அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகளைக் காட்டிலும் நிலையான, சாதாரண ரிட்டர்ன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இவை பொருத்தமானவை.

ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள், ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. உண்மையான ரிட்டர்ன்கள் சந்தை நிலை மற்றும் பிற காரணிகளுக்கு உட்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும்.  இந்த ஃபண்ட் தங்களுக்குப் பொருத்தமானதா என்ற சந்தேகம் இருந்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?