சேமிப்புகள் மற்றும் கடன்கள் வர்த்தகத்தை வங்கிகள் மேற்கொள்கின்றன ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பணத்தை சேவிங்க்ஸ் கணக்கு அல்லது ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் போது, நீங்கள் சேமிக்கிறீர்கள். அதேசமயம், உங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸில் போடும் போது,அது முதலீடாகிறது. வங்கியும் மியூச்சுவல் ஃபண்ட்ஸும் இரண்டு வெவ்வேறான வர்த்தகங்கள். இவற்றிற்கு குறிப்பிட்ட துறை சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிபுணத்துவம் தேவை. வங்கிகளை RBI அமைப்பும், மியூச்சுவல் ஃபண்ட்களை SEBI அமைப்பும் ஒழுங்குபடுத்துகிறது. எந்தப் பெருநிறுவனமாவது, வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பினால், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து தனித்தனியாக உரிம அனுமதிகளைப் பெற வேண்டும்.
ஒருசில வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வர்த்தகத்திலும் ஈடுபடுவதை நீங்கள் காணலாம். ஆனால், வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இரண்டுமே செயல்பாட்டுத் தொடர்புகள் ஏதுமற்ற இரு வேறு நிறுவனங்கள் ஆகும். எனவே, வங்கியின் கடந்தகாலச் செயல்பாடு நன்றாக இருப்பதைக் கொண்டு ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது.
பெரும்பாலான வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்ட பல நிதித் திட்டங்களின் விநியோகஸ்தராக செயல்படுகின்றன. அவை, விநியோகத்துக்காக, தங்களுடன் (வங்கிகள்) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட்களுக்கான விற்பனை சேனல்களாக செயல்படுகின்றன. எனவே, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எவ்வாறு முதலீடு செய்வது என்ற கேள்வியுடன் வங்கிகளை அணுக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், சந்தையில் கிடைக்கப்பெறும் எல்லா ஃபண்ட்களையும் வங்கிகள் விற்பனை செய்யாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.