ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த ஃபண்டுகளில் நான் முதலீடு செய்திருக்க வேண்டுமா?

நான் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்வதற்கான ஃபண்ட்கள் உள்ளதா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸின் பெரும் ஆதாயம் அதன் எளிதாகப் பணமாக்கும் தன்மை.

பிரிவு 80C -யின் கீழ் வரி நலன்களை வழங்கிடும் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டங்கள் (ELSS) போன்ற திட்டங்களுக்கு ஒழுங்குமுறைகளின்படி 3 வருடங்கள் யூனிட்களின் ‘லாக்-இன்’ தேவை. அதன்பின்னர் அவற்றை எளிதில் பணமாக்கிக் கொள்ள முடியும்.

“நிலையான முதிர்வுத் திட்டங்கள் (ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்ஸ் - FMP)” என்று பிரபலமாக அறியப்படும் மற்றொரு வகையான திட்டங்கள் உள்ளன. இதில் திட்டத்தின் வழங்கல் ஆவணங்களில் முன் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலத்துக்கு முதலீட்டாளர்கள் முதலீட்டைத் தக்க வைக்க வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு மூன்று வருடம் முதல் ஒருசில வருடங்கள் வரை முதலீட்டுக் காலகட்டம் இருக்கலாம்.

இருந்தாலும், ஒருசில ஓப்பன் எண்டட் திட்டங்கள் வெளியேற்றக் காலகட்டத்தைக் குறிப்பிடலாம். உதாரணத்திற்கு, 6 மாதங்களுக்குள் யூனிட்களை பணமாக்கும் போது, பொருந்தக்கூடிய NAV -யில் 0.50% அளவிலான வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படும் என்று திட்டமானது குறிப்பிடலாம்.

குறைந்த கால முதலீடுகளில் சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். எனவே, பொருத்தமான திட்டங்கள் அல்லது சிறந்த முதலீட்டு கால வரம்பு குறித்து அறிய நிதி நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

348

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?