மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்க்கெட்டுடன் இணைக்கப்பட்ட திட்டங்களாகும். அதோடு பல்வேறு வகை ரிஸ்க்குகளும் கொண்டவை, அவற்றின் ரிட்டர்ன்ஸுக்கும் உத்தரவாதம் கிடையாது. சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்ய வேண்டுமானால், அதன் முதலீட்டு இலக்கையோ ரிட்டர்ன்ஸ் வரும் சாத்தியத்தையோ மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலுள்ள ரிஸ்க்குகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு முதலீட்டாளரும் வித்தியாசமான ஆளுமை கொண்டவர்கள் எனலாம். உதாரணமாக, எந்த விதமான ரிஸ்குகள் வந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற பல்வேறு விஷயங்களில் அவர்கள் வேறுபடுவார்கள். ஆகவே எந்த மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்கிறார்கள் என்பது, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் வேறுபடும். ரிஸ்க் சார்ந்த விருப்பத்தேர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் மனதில் ஓர் இலக்கு இருக்கும். மதிப்பு மற்றும் கால வரம்பு போன்ற பல விஷயங்களில் அவையும் வேறுபடும். ஆகவே ஒருவர் சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்ய வேண்டுமானால், ரிஸ்க்-ரிட்டர்ன்-கால வரம்பு ஆகிய காரணிகளைக் கொண்டு பல்வேறு ஃபண்ட்களை மதிப்பாய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.
ஓர் உதாரணத்தின் மூலம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 30 வயதுள்ள ஒருவரும் 50 வயதுள்ள ஒருவரும் தங்கள் ஓய்வூதிய நிதிக்காக முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவருமே ஓய்வூதிய நிதிக்காகவே முதலீடு செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கும் ஃபண்ட்கள் வெவ்வேறாக இருக்கும். 30 வயது நபர் 25-30 வயது வரம்பில் உள்ளவர் என்பதால் அவர் அதிக ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் 50 வயதுள்ளவருக்கோ இலக்கை அடைய 8-10 வருடங்களே உள்ளது என்பதால் அவர் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
உங்கள் ரிஸ்க் தயார்நிலைக்குப் பொருந்தக்கூடிய ரிஸ்க் புரொஃபைலைக் கொண்டுள்ள ஃபண்டைத் தேர்வுசெய்யுங்கள். ரிஸ்க் குறைவாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், டெப்ட் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கலாம். ரிஸ்க் எடுப்பது பற்றிக் கவலையில்லை என்றால், தகுந்த ஈக்விட்டி ஃபண்டைத் தேர்ந்தெடுக்கலாம். ரிஸ்க் ஓரளவு இருந்தால் பரவாயில்லை என நினைத்தால், ஹைப்ரிட் ஃபண்டைத் தேர்ந்தெடுக்கலாம். ஆகவே, ஃபண்டைத் தேர்தெடுப்பதில் முதல் படி, எவ்வளவு ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்வதே ஆகும்.