டெப்ட் ஃபண்டுகள் தொடர் வருமானத்தை வழங்குமா?

டெப்ட் ஃபண்ட்கள் தொடர்ச்சியான வருமானத்தைத் தருமா? zoom-icon

முதலீட்டாளர்களுடைய பணத்தை, டெப்ட் ஃபண்ட்கள், வட்டி ஈட்டித் தரும் செக்யூரிட்டிக்களான பாண்டுகள், கார்ப்பரேட் டெபாசிட்கள், அரசாங்கப் பத்திரங்கள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. இந்த பாண்டுகள் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வட்டியை வழங்குவதற்கான ஓர் உறுதிப்பாட்டை அளிக்கும் சான்றிதழ் போன்றவை. இவ்வாறு, அவற்றின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் இதுபோன்ற செக்யூரிட்டிகளில் இருந்து தொடர்ச்சியான வருமானத்தை டெப்ட் ஃபண்ட்கள் பெற்றுத் தரும். டெப்ட் ஃபண்ட்கள், அதன் பாண்டு போர்ட்ஃபோலியோவின் மூலம்பெறப்படும் வட்டி வருவாயானது, முதலீட்டாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படலாம் அல்லது NAV-ஐ அதிகரிக்கும் வகையில் ஃபண்டுடன் சேர்க்கப்படலாம். போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் இருந்து, டிவிடென்ட் விநியோகத்தைச் சார்ந்து இருக்கும் ஈக்விட்டி ஃபண்ட்களைப் போன்று அல்லாது, டெப்ட் ஃபண்ட்கள் அதன் போர்ட்ஃபோலியோவிலிருந்து தொடர்ந்து நிலையான வட்டி வருவாயை அளித்திடும்.

உங்கள் டெப்ட் ஃபண்டில் இருந்து நீங்கள் தொடர்ந்த வருவாயைப் பெற விரும்புகின்ற பட்சத்தில், ஒரு முதலீட்டாளராக நீங்கள் டிவிடென்ட் பட்டுவாடா தேர்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வு ‘டிவிடென்ட் பட்டுவாடா (டிவிடென்ட் பேஅவுட்)’ என்று அழைக்கப்படுகின்ற அதேசமயத்தில், இது வட்டி வருவாயையும், அதன் போர்ட்ஃபோலியோவில் இருந்து பெறப்படும் மூலதன இலாபங்களையும் தொடர்ச்சியான இடைவெளிகளில் விநியோகித்திடும். டெப்ட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் வட்டியை வழங்கக்கூடிய செக்யூரிட்டிகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் இருந்து கிடைக்கக்கூடிய டிவிடென்ட் விநியோகத்துடன் ஒப்பிடும்போது, முன்கூட்டியே கணிக்கத்தக்கதாகவும், தொடர்ச்சியாக இருந்தாலும், இந்த டிவிடென்ட்களுக்கு உத்தரவாதம் கிடையாது. ஃபண்டில் விநியோகிக்கத்தக்க உபரி இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே டிவிடென்ட்கள் அளிக்கப்படும். விநியோகிக்கத்தக்க உபரி மற்றும் வருவாய் என்பது, எப்போதுமே தொடர்ச்சியானதாக இருக்காது.

398

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?