மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

மிட் கேப் ஃபண்ட்களுக்கும் ஸ்மால் கேப் ஃபண்ட்களுக்கும் என்ன வேறுபாடு?

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் இரண்டும் ஒன்று தானா என்று உங்களுக்குக் கேள்வி எழுந்தால்,  அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். இவை இரண்டும், மார்க்கெட் சைஸைப் பொறுத்து, வெவ்வேறு வகை நிறுவனங்களில் முதலீடு செய்கின்ற இரண்டு வகை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களாகும். ஆகவே இவற்றின் ரிஸ்க்-ரிட்டர்ன் புரொஃபைல்களும் வெவ்வேறாக உள்ளன.

இந்தியாவின் பல்வேறு எக்ஸ்சேஞ்களில் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மிட் கேப் என்பது மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் = பொதுவில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை * ஒரு பங்கின் விலை), 101வது முதல் 250வது வரையுள்ள நிறுவனங்களைக் குறிக்கிறது. இதில் 251வது நிறுவனம் முதல் அதற்குப் பிறகுள்ள நிறுவனங்கள் அனைத்தும் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனைப் பொறுத்து ஸ்மால் கேப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

மிட் கேப் ஃபண்ட், அதிக வளர்ச்சி சாத்தியம் கொண்ட, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மற்றும் நிலைத்தன்மையை அடைந்துவிட்டதன் காரணமாக, ஸ்மால் கேப் நிறுவனங்களுடன் தொடர்புடைய ரிஸ்க் கொண்டிருக்காத மிட் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும். எங்களுடைய இந்தக் கட்டுரைகளைப் படித்தால் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்:
mutualfundssahihai.com/ta/what-are-mid-cap-funds

ஸ்மால் கேப் ஃபண்ட் என்பது, தற்போது அதிக வளர்ச்சி சாத்தியத்தைக் கொண்டிருக்கின்ற, ஆனால் அதே அளவு ரிஸ்க்கையும் கொண்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும். அதிக நிலைத்தன்மை கொண்ட லார்ஜ் கேப் ஸ்டாக்குகளைப் போலன்றி, ஸ்மால் கேப் ஸ்டாக்குகள் அதிக ஏற்ற இறக்கம் கொண்டிருக்கலாம்.
ஆகவே, மிட் கேப் ஃபண்ட்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்களை விட அதிக ரிட்டர்ன்ஸ் கொடுக்கும் திறன் கொண்டவை, அதே சமயம் ஸ்மால் கேப் ஃபண்ட் வகையைப் போல அதிக ரிஸ்க்கையும் கொண்டிருக்காது. ஆனால், இவற்றிலும் லார்ஜ் கேப் ஃபண்ட்களைவிட அதிக ரிஸ்க் கொண்ட அம்சங்கள் சில உள்ளன. 

இவை முதலீடு செய்யும் ஸ்டாக்குகளின் வகையைப் பொறுத்து, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் இரண்டும், குறுகிய காலம் முதல் நடுத்தரக் காலம் வரையில் முதலீடு செய்கையில் ரிஸ்க்கானவையே. இளைஞர்கள் பணி ஒய்வு, குழந்தைகளின் கல்வி போன்ற நீண்ட கால இலக்குகளுக்குத் திட்டமிட விரும்பினால் இந்த ஃபண்ட்கள் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் 5-7 ஆண்டு கால வரம்பில், இவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை இவர்களால் சமாளித்து நிற்க முடியும். ப்ளூச்சிப் ஸ்டாக்குகளைப் போலன்றி, இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஸ்டாக்குகள், ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் இருப்பதும், ப்ளூச்சிப் ஸ்டாக்குகளின் நிலையான வளர்ச்சியை இன்னும் அடைந்திருக்காது. 

ஆனால், 20 அல்லது 30களில் இருக்கும் இளைஞர்கள் அவர்களின் போர்ட்ஃபோலியோவில் இந்த ஃபண்ட்களை வைத்திருக்கக்கூடாது என்று பொருளல்ல. நடுத்தரம் முதல் அதிக அளவு வரையான ரிஸ்க் வெறுப்பு கொண்ட இளவயது முதலீட்டாளர்கள், இந்த ஃபண்ட்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக அதிக நிலையான லார்ஜ் கேப் ஃபண்ட்களிலேயே தொடர வேண்டும்.

345

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?