ரிஸ்கை நிர்வகிப்பதற்கு ரீபேலன்ஸிங் செய்வது ஒரு புத்திசாலித்தனமான வழியாகும், குறிப்பாக மார்க்கெட் கணிக்க முடியாதபடி இருக்கும் போது. எந்த அளவுக்கு நீங்கள் ரிஸ்கை சிரமம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் உங்கள் போர்ட்ஃபோலியோவை தகுந்த நிலையில் வைத்திருக்க இது உதவுகிறது. தொடர்ந்து அவ்வப்போது ரீபேலன்ஸிங் செய்வதன் மூலம், உங்கள் முதலீடுகள் சரியான பாதையிலும் உங்கள் நிதி இலக்குகளை நோக்கியும் செல்வதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். முதலீட்டு உத்தி அல்லது நீங்கள் சமாளிக்கக்கூடிய ரிஸ்க் எவ்வளவு என்பதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உங்கள் புதிய திட்டங்களுக்கு ஏற்ற வகையில் போர்ட்ஃபோலியோவை சரி செய்ய ரீபேலன்ஸிங் உதவுகிறது.
உங்கள் முதலீடுகளை ரீபேலன்ஸ் செய்வதற்கான படிகள்:
> உங்கள் அசெட் அலொகேஷனைத் தீர்மானியுங்கள்
ஈக்விட்டி மற்றும் டெப்ட் போன்ற பல்வேறு வகை முதலீடுகளில் உங்கள் பணத்தை எப்படிப் பிரிக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். உங்கள் நிதி இலக்குகளைப் பற்றியும், உங்களால் எவ்வளவு ரிஸ்கை சமாளிக்க முடியும் என்பதையும், எவ்வளவு காலத்திற்கு பணத்தை முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் பற்றி யோசித்துப் பாருங்கள்.
> உங்கள் தற்போதைய அலொகேஷனை ஆய்வு செய்யுங்கள்
அடுத்ததாக, உங்கள் தற்போதைய அசெட் அலொகேஷனை ஆய்வு செய்து உங்கள் இலக்குடன் ஒப்பிடுங்கள். உங்கள் இலக்குடன் அது பொருந்தாமல் இருந்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் ரீபேலன்ஸிங் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
> எதை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்
ஒரு மியூச்சுவல் ஃபண்டு போர்ட்ஃபோலியோவை ரிபேலன்ஸிங் செய்யும்போது, உங்கள் தற்போதைய அசெட் அலொகேஷனை உங்கள் இலக்கு அலொகேஷனுடன் ஒப்பிடுங்கள். அவை வேறுபட்டால், மிக அதிகமாக இருக்கின்ற அசெட் வகைகளில் உள்ள ஃபண்டுகளை விற்பனை செய்யுங்கள், மிகக் குறைவாக உள்ள ஃபண்டுகளை வாங்குங்கள். உதாரணத்திற்கு, ஈக்விட்டி மற்றும் டெப்ட்டில் 50: 50 என்ற விகிதத்தில் முதலீடு செய்வது உங்கள் இலக்காக இருந்தால், இந்த சமநிலையை அடைவதற்காக நீங்கள் ஈக்விட்டி ஃபண்டுகள் சிலவற்றை விற்கலாம் அல்லது அதிக டெப்ட் ஃபண்டுகளை வாங்கலாம். ஒரு வேளை மார்க்கெட் வீழ்ச்சியடைந்து உங்கள் டெப்ட் அலொகேஷன் அதிகமானால், ரீபேலன்ஸிங் செய்வதற்கு நீங்கள் அதிக ஈக்விட்டி ஃபண்டுகளை வாங்க வேண்டும் அல்லது கொஞ்சம் டெப்ட் ஃபண்டுகளை விற்க வேண்டும்.
> தாங்கும் வரம்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஒவ்வொரு வகை முதலீட்டுக்கும் தாங்கும் வரம்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஈக்விட்டி அல்லது டெப்ட் ஃபண்டுகளில் உங்கள் இலக்கு 50% என்றும், உங்கள் தாங்கும் திறன் 4% என்றும் இருந்தால், ஈக்விட்டி அல்லது டெப்ட் ஃபண்டுகள் 54% க்கு மேல் அல்லது 46% க்குக் கீழ் செல்லும்போது நீங்கள் ரீபேலன்ஸ் செய்ய வேண்டி இருக்கும்.
> உத்தி சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்
ஒரே நேரத்தில் அனைத்தையும் சரிக்கட்டாமல், நீண்ட கால அளவில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்தினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க இது உதவும். குறிப்பிட்ட அசெட் வகையின் விலை கணிசமாக குறையும்போது அதை அதிகம் வாங்கி மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
> உங்கள் வரி விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
எதிர்பாராத வரிச் சுமைகளைத் தவிர்க்கவும், வரி சேமிப்புத் திறன் கொண்ட உத்திகளின் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ரிட்டர்ன்களை சிறந்த அளவில் வைத்திருக்கவும், ஒரு மியூச்சுவல் ஃபண்டு போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸிங் செய்யும்போது வரி விளைவுகளை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
> போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து கண்காணியுங்கள்
உங்கள் முதலீட்டு இலக்குகள் மற்றும் உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனுக்கு ஏற்ற வகையில் உங்கள் போர்ட்ஃபோலியோ இருக்கிறதா என்பதை அவ்வப்போது கண்காணியுங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உதாரணமாக ஆண்டுதோறும் அல்லது அரை ஆண்டுக்கு ஒரு முறை ரிபேலன்ஸ் செய்யுங்கள்.
உங்கள் முதலீட்டின் கலவையை தொடர்ந்து அவ்வப்போது சரி செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பதில் மிகவும் முக்கியமாகும். கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் ரிட்டர்ன்களை அதிகப்படுத்துவதற்கும் இது உதவும். ரீபேலன்ஸிங் செய்யும்போது அது தொடர்பான வரி விளைவுகளையும் கவனமாகக் கருத்தில் கொள்ளுங்கள்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.