மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகள் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் மற்றும் அந்த செக்யூரிட்டிகளின் இயல்பு திட்டத்தின் நோக்கத்தைச் சார்ந்து இருக்கும்.
உதாரணத்திற்கு, ஈக்விட்டி அல்லது குரோத் ஃபண்ட்ஸ் திட்டங்கள்,நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். லிக்விட் ஃபண்ட்கள், டெபாசிட் சான்றிதழ்கள் மற்றும் கமர்ஷியல் பேப்பர்களில் முதலீடு செய்யும்.
இருந்தாலும், இந்த எல்லா செக்யூரிட்டிகளுமே ‘சந்தையில்’ டிரேட் செய்யப்படுகின்றன. கேப்பிடல் சந்தையில் வெளியிடப்படும் நிறுவனப் பங்குகள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வாங்கி, விற்கப்படுகின்றன. அதேபோன்று, அரசாங்கப் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் ஆவணங்களை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மூலமோ அல்லது NDS எனப்படும் பிரத்யேக அமைப்புகளின் மூலமோ வர்த்தகம் செய்ய முடியும். இவை செக்யூரிட்டிகளை வாங்கி விற்கின்ற சந்தையாக உள்ளது
மேலும் வாசிக்க