அதே சமயம், எக்ஸிஸ்டிங் ஃபண்டுகள் நீண்ட காலமாக இருந்து வருபவை, அவற்றின் வரலாறும் நீண்டதாக இருக்கும், இதனால் அவை இதுவரை எப்படி செயல்பட்டுள்ளன என்பதைப் பற்றிய தகவல் கிடைக்கும். எக்ஸிஸ்டிங் ஃபண்டுகளுக்கு முதலீட்டாளர்கள் அந்த ஃபண்டு தொடர்ந்து சீராக நல்ல பலன்களைக் கொடுத்துள்ளதா இல்லையா என்று ஆய்வு செய்ய முடியும், அதன் அடிப்படையில் தற்போதைய NAV மதிப்பின்படி அந்த ஃபண்டுகளின் யூனிட்டுகளை வாங்க முடியும்.
ஆகவே உங்களுக்கு இந்த இரண்டில் எது சிறந்தது? தனிப்பட்ட ஒருவரது நிலை மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்தே இது அமையும் என்பதே உண்மை. NFO மற்றும் எக்ஸிஸ்டிங் ஃபண்டுகள் இவை இரண்டிலும் உள்ள சில நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம், இதன் அடிப்படையில்உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
NFO மற்றும் எக்ஸிஸ்டிங் ஃபண்டு
NFOகளில் முதலீடு செய்வதன் நன்மைகள்:
> டைவர்சிஃபிகேஷன் நன்மைகள்
பெரும்பாலான சமயங்களில் NFOகள் இதற்கு முன்பு கிடைக்காத புதிய உத்திகள் அல்லது புதிய வகை ஃபண்டுகளை அறிமுகப்படுத்தும். இது உங்களுடைய முதலீடுகளுக்கு டைவர்சிஃபிகேஷன் நன்மையை அளிக்கும்.
> வளர்ந்து வரும் போக்குகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
NFOகள் பெரும்பாலும் உருவாகி வரும் புதிய மார்க்கெட் போக்குகளின் அடிப்படையில் செல்பவை. ஒரு துறை அல்லது ஒரு தீம் தனது முழு வீச்சை அடைவதற்கு முன்பு அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஒருவர் பெற்றால், சிறந்த ரிட்டர்னை எதிர்பார்க்க முடியும்.
> நுழைவதற்கு குறைந்த செலவு
பெரும்பாலான NFOகள் யூனிட் ஒன்றுக்கு INR 10 என்ற மிகக் குறைந்த நுழைவு விலையையே கொண்டிருக்கும், இதனால் எல்லோருமே அதை வாங்க முடியும், குறைந்த முதலீட்டில் மூலமே ஒருவர் அதிக யூனிட்டுகளைப் பெற முடியும்.
அதே சமயம் எக்ஸிஸ்டிங் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் உள்ள நன்மைகள்:
> நிரூபிக்கப்பட்ட கடந்தகால பெர்ஃபார்மன்ஸ்
நீண்ட காலம் இருந்து வரும் ஃபண்டுகளுக்கு கடந்த காலத்தில் அவற்றின் ரிட்டர்ன்கள் மற்றும் ஏற்ற இறக்கம் எப்படி இருந்தது என்பது பற்றிய தகவல் கிடைக்கும், பல்வேறு மார்க்கெட் சுழற்சிகளின்போது அவற்றின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருந்தது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துக் கொள்ள இது உதவும்.
> நன்கு நிலைபெற்ற மற்றும் டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ
இதனால் முன்பே டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ இவற்றுக்கு கிடைக்கிறது ஆகவே மார்க்கெட்டில் நிகழும் ஏற்ற இறக்கங்கள் ஃபண்டு மேனேஜர்கள் எடுக்கும் முடிவுகள் போன்றவற்றால் எற்படக்கூட்டிய ஆரம்பக்கட்ட ரிஸ்க்குகளை இவை குறைக்கின்றன.
> பல்வேறு தெரிவுகள் கிடைக்கும்
முதலீட்டாளர் தேர்வு செய்வதற்கு நிறைய ஃபண்டுகள் இருக்கும், நிதி விஷயத்தில் அவற்றின் பெர்ஃபார்மன்ஸ், ரிஸ்கிற்கு ஏற்றபடி சரிக்கட்டப்பட்ட ரிட்டர்ன்கள், ஃபண்டு மேனேஜரின் நிபுணத்துவம் ஆகிவற்றின் அடிப்படையில் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
NFO மார்க்கெட்டின் நேரம் மற்றும் உத்தியைப் பொறுத்தவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் இவை வாய்ப்புகளை வழங்கும் அதே சமயம் ரிஸ்க்கும் அதிகம். எக்ஸிஸ்டிங் ஃபண்டுகளைப் பொறுத்தவரை நன்கு நிலைபெற்ற உத்திகள் மற்றும் டைவர்சிஃபிகேஷன் மூலம் நன்மைகள் கிடைக்கும், ஆனால் சேச்சுரேட் ஆன மார்கெட்டுகளின் பெர்ஃபார்மன்ஸில் சிக்கல்கள் இருக்கலாம்.
இறுதியாக, NFO மற்றும் எக்ஸிஸ்டிங் ஃபண்டுகள் இவற்றுக்கு இடையே ஒன்றைத் தேர்வு செய்வது என்பது உங்களுடைய முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் தாங்கும் திறன், மார்க்கெட் தகவல் ஆகியவற்றைப் பொறுத்தது. புதிய தீம்கள் மற்றும் உத்திகளில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், NFOகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கலாம். இருந்தாலும், நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நிரூபிக்கப்பட்ட கடந்தகால பெர்ஃபார்மன்ஸ் தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், எக்ஸிஸ்டிங் ஃபண்டுகளே உங்களுக்கான சிறந்த தெரிவாக இருக்கலாம்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.