மியூச்சுவல் ஃபண்ட் உலகத்தில், NFO என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளலாம். NFO என்பது நியூ ஃபண்ட் ஆஃபர் என்பதன் சுருக்கமாகும். ஒரு நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவது போலவே தான் இதுவும். . மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்தான் “தயாரிப்பு”, NFO என்பது புதிய ஸ்கீமின் யூனிட்டுகளை வழங்குவதைக் குறிக்கிறது.
“மியூச்சுவல் ஃபண்ட்களில் NFO என்றால் என்ன?” என்ற உங்கள் கேள்விக்கு எளிமையாக பதில் சொல்வதென்றால், ஏற்கனவே உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்துகின்ற ஒரு புதிய மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்தான் NFO என்று சொல்லலாம்.
நீங்கள் NFO-இல் முதலீடு செய்யும்போது, உங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுக்கு வழங்குகிறீர்கள், ஸ்கீமின் இலக்குகளுக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதங்களில் முதலீடுகளைச் செய்ய ஃபண்ட் மேனேஜர் அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்.
NFO காலத்தின்போது, இந்தப் புதிய ஸ்கீமின் யூனிட்டுகளை ஆஃபர் விலையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம், பொதுவாக இது ஒரு நிலையான தொகையாகத் தீர்மானிக்கப்படும் (உதாரணமாக யூனிட் ஒன்று ரூ. 10). முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட பணம் பிறகு ஒன்றாகச் சேர்க்கப்படுகிறது. NFO காலம் முடிந்தபிறகு, இப்படிச் சேர்க்கப்பட்ட பணத்தை மியூச்சுவல் ஃபண்டானது ஸ்கீமின் இலக்குகளின் அடிப்படையில் பல்வேறு ஃபினான்ஷியல் இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்கிறது. இதன் மூலம் ஆரம்பத்திலிருந்தே ஸ்கீமின் பயணத்தில் முதலீட்டாளர்கள் ஒரு அங்கமாக இருக்க முடிகிறது.
எனினும், ஸ்கீமின் முதலீட்டுக் குறிக்கோள்களுடன் இணக்கமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, NFO-இல் முதலீடு செய்யும் முன்பு உங்கள் இலக்குகளையும் ரிஸ்க் புரொஃபைலையும் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
NFO காலத்தின்போது (பொதுவாக இது 15 நாள் சந்தாக் காலமாக இருக்கும்), முதலீட்டாளர்கள் தீர்மானிக்கப்பட்ட விலைக்கு இந்த யூனிட்டுகளை வாங்குவார்கள் (உதாரணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.10). ஃபண்ட் மேனேஜர் வழங்கும் தெரிவுகளைப் பொறுத்து, முதலீட்டாளர்கள் லம்ப்-சம் முதலீடு அல்லது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலமாகவோ முதலீடு செய்யத் தேர்வுசெய்யலாம்.
முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டுப் பயணத்தில் அடியெடுத்து வைக்க NFO வாய்ப்பாகத் திகழ்கிறது, ஆனால் கவனமாக மதிப்பீடு செய்வது இதில் மிக முக்கியமாகும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.