ஸ்கீமின் போர்ட்ஃபோலியோ சார்ந்த முற்றிலும் முதலீடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈட்டும் இலாபத்திலிருந்தே டிவிடென்ட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வழங்குவது டிரஸ்டீயின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும். மார்க்கெட் வீழ்ச்சியின் காரணமாக ஒரு ஸ்கீம் நட்டத்தைச் சந்தித்தால், டிவிடென்ட் பே-அவுட் அறிவிப்பைக் கைவிடலாம் என்று டிரஸ்டீக்கள் முடிவு செய்யலாம். டிவிடென்ட் என்பது லாபம் அல்லது வருமானம் என்பதால், அது வரிவிதிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. டிவிடென்ட்களுக்கு விதிக்கப்படும் வரி டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி (DDT) எனப்படுகிறது. முன்பெல்லாம், டிவிடென்ட்கள் வழங்கப்படும்போதே வரி பிடிக்கப்பட்டது. அதாவது அதை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முன்பே அந்த ஸ்கீமே வரித் தொகையைக் கழித்துக்கொள்ள வேண்டும். இதனால் டிவிடென்ட் பே-அவுட்
மேலும் வாசிக்க