தங்களின் பெற்றோர்/பாதுகாவலர்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் மைனர்கள் முதலீடு செய்யலாம். இந்தச் சூழ்நிலையில் முதல் மற்றும் ஒரே கணக்குதாரராக மைனர் இருப்பார் மற்றும் அவரை பிறவிப் பாதுகாவலர் (தந்தை / தாய்) அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரால் (நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்) பிரதிநிதித்துவப்படுத்துவார். பிறவிப் பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மைனர், தனது 18 வயதில் மேஜர் நிலையை அடைவார். சட்டப்பூர்வப் பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மைனர், தனது 21 வயதில் மேஜர் நிலையை அடைவார்.
மைனர் மேஜாரானவுடன், கணக்கு வைத்திருக்கும் நபரின் நிலையை, மைனரிலிருந்து, மேஜருக்கு மாற்ற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்கில் நடக்கவேண்டிய அனைத்து எதிர்காலப் பரிவர்த்தனைகளும் (SIP / SWP / STP) நிறுத்தப்படும். தேவையான ஆவணங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்கும்படி பாதுகாவலர் மற்றும் மைனருக்கு முன்கூட்டியே மியூச்சுவல் ஃபண்ட்கள் அறிவிப்பை அனுப்பிடும். மைனரின் நிலையை மேஜருக்கு மாற்றுவதற்கு, வங்கி அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்ட மைனரின் கையொப்பத்துடன் பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்குப் பதிவுப் படிவம் மற்றும் மைனரின் KYC ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போது வரித் தாக்கங்களை கணக்கு வைத்திருக்கும் நபர் (மேஜர்) ஏற்க வேண்டும். குழந்தை மைனராக இருக்கும் வரை, குழந்தையின் கணக்கிலிருந்து கிடைக்கும் அனைத்து வருமானங்களும் ஆதாயங்களும் பெற்றோர்/பாதுகாவலரின் வருமானத்தின் கீழ் இணைக்கப்பட்டு, பொருந்தக்கூடிய வரிகளை பெற்றோர்/பாதுகாவலர் செலுத்திடுவார். மேஜராகும் ஆண்டிலிருந்து, மைனர் ஒரு தனிநபராகக் கருதப்படுவார். மேலும் அந்த ஆண்டில் அவர் மேஜராக இருக்கும் மாதங்களுக்கு வரிகளைச் செலுத்துவார்.