கோல்டு ETFகள் மற்றும் கோல்டு ஃபண்டுகளின் நன்மைகள்

கோல்ட் ETFகள் மற்றும் கோல்ட் ஃபண்ட்களின் நன்மைகள் zoom-icon

கோல்ட் ETFகள் 99.5% தூய கோல்ட் புல்லியனில் முதலீடு செய்கின்றன, இது உண்மையான உலோகத்தில் முதலீடு செய்வது போன்றது. நீங்கள் நீண்டகாலத்திற்கு தொடர்ந்து தங்கத்தைச் சேமித்துவர விரும்பினால், ஆபரணத் தங்கமாக வாங்கிவைப்பதைவிட அல்லது கோல்ட் ஃபண்டில் முதலீடு செய்வதைவிட கோல்ட் ETFகளில் முதலீடு செய்வது சிறந்த வழியாகும்.

சுரங்கத்தொழில், செயலாக்கம், உருவாக்கம் மற்றும் தங்க விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில், கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன. இந்த நிறுவனங்களின் பங்கு விலைகளின் இயக்கத்தைப் பொறுத்து கோல்ட் ஃபண்ட்களின் செயல்திறன் இருக்கும். கோல்ட் ETFகள் உலோகத்தின் செயல்திறனுடன் நேரடியாக இணைந்த ரிட்டர்ன்ஸை வழங்குகின்றன, கோல்ட் ஃபண்ட்கள் தங்கத் தொழிற்துறையின் செயல்திறனுடன் இணைந்த ரிட்டர்ன்ஸை வழங்குகின்றன. 

கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஃபண்ட் மேனேஜர்களால் கவனமாக நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் மார்கெட் இன்டெக்ஸைப் போலவே மாறும் கோல்ட் ETFகளுடன் ஒப்பிடுகையில் அதிக ரிட்டர்ன்ஸை அளிக்கும் திறன் கொண்டவை. ETFகள் கோல்ட் ETFகளைப் போன்றே இயங்குவதால், கோல்ட் ETFகள் கோல்ட் ஃபண்ட்களைவிடக் குறைவான எக்ஸ்பென்ஸ் ரேஷியோ கொண்டுள்ளன. கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட்களைவிட உண்மையான உலோகத்தின் விலை இயக்கத்தை கோல்ட் ETFகள் மிகவும் துல்லியமாகப் பின்தொடர்கின்றன. ETFகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால், அவை மிக அதிக லிக்விடிட்டியை வழங்குகின்றன. தங்கத்தின் நிகழ்நேர விலையில், பகலில் எந்த நேரத்திலும் உங்கள் பங்குகளை நீங்கள் வாங்கவோ விற்கவோ செய்யலாம். இதனால் உண்மையான தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக கோல்ட் ETFகளை வாங்குவது சிறந்தது. SIP மூலம் நீண்ட காலத்திற்கு தங்கத் தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பை கோல்ட் ஃபண்ட்கள் அளிக்கின்றன. 

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?