ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர்

உங்களது தற்போதைய முதலீட்டைக் கவனத்தில் கொண்டு,
தேவையான SIP அல்லது லம்ப்-சம் தொகையைக் கணக்கிட்டு உங்கள் நிதி இலக்கைத் திட்டமிடுங்கள்.

இலக்குத் தொகை
வருடங்கள்
%
முதலீடு செய்த தொகையின் இறுதி மதிப்பு ₹54.74 இலட்சம்
உங்கள் இலக்கை அடைய மீதமுள்ள தொகை ₹45.26 இலட்சம்
மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன் விகிதம் %
மாதாந்தம் SIP முதல் முதல் பங்கு ₹9,060.48
இலக்குத் தொகை
வருடங்கள்
%
SIP முதலீடுகளின் இறுதி மதிப்பு ₹49.96 இலட்சம்
உங்கள் இலக்கை அடைய மீதமுள்ள தொகை ₹50.04 இலட்சம்
எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம் %
லம்ப்-சம் ஆக முதலீடு செய்யப்பட வேண்டிய தொகை ₹9.14 இலட்சம்

பொறுப்புத்துறப்பு:

கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.

ஒரு மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு அசெட் பிரிவிலும் குறிப்பிட்ட அளவு ரிஸ்க் இருக்கும்.

ஆன்லைன் கால்குலேட்டர் என்பது உங்கள் SIP மற்றும் லம்ப்-சம் முதலீடுகளின் இறுதி மதிப்பைத் தீர்மானிக்கும் ஒரு தோராயமான முறை ஆகும். எந்தவொரு முதலீட்டின் உத்திரவாதமான இறுதி ரிட்டர்ன் அல்லது செயல்திறனையும் இந்தக் கால்குலேட்டர் வழங்காது. உண்மையான முடிவுகள் சந்தை நிலவரங்கள், வரிச் சட்டங்கள், பிற காரணிகள் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடலாம்.

அனைத்து விதமான கட்டணங்கள், முதலீடு தொடர்பான செலவுகள் போன்றவற்றை இந்தக் கால்குலேட்டர் கணக்கில் எடுக்கவில்லை, இவை ரிட்டர்ன் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்களே அலசி ஆராய்ந்து பார்க்கவோ ஒரு நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவோ பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர் என்றால் என்ன?

ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர் என்பது நீங்கள் இலக்கு வைத்திருக்கும் பணத்தை விரும்பிய நாட்களுக்குள் சேமிக்க லம்ப்-சம் அல்லது SIP மூலமாக அல்லது இரண்டும் சேர்த்து நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் ஒரு கருவி ஆகும்.

உங்கள் இலக்குத் தொகை, முதலீட்டுக் காலம், எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் போன்ற சில அவசியமான விவரங்களை வழங்குவதன் மூலம், லம்ப்-சம் மற்றும் SIP முதலீடுகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதை இந்தக் கால்குலேட்டர் கணக்கிடுகிறது.

ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர் எப்படிச் செயல்படுகிறது?

ஸ்மார்ட் கோல் கால்குலேட்டரை நன்றாகப் பயன்படுத்த, உங்கள் முதலீட்டுத் திட்டத்தைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்:

  • இலக்குத் தொகை: உங்கள் முதலீடுகள் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இலக்குத் தொகையை வழங்கவும். முதலீட்டுக் காலம்: எவ்வளவு காலத்திற்குள் உங்கள் நிதி இலக்கை அடைய நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வழங்கவும்.
  • லம்ப்-சம் தொகை: ஒரேமுறை லம்ப்-சம் முதலீட்டை நீங்கள் செய்ய விரும்பினால் (அத்துடன் முதலீடு செய்வதற்கான SIP தொகையைக் கண்டறிய விரும்பினாலும்), தொடக்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை வழங்கவும்.
  • SIP தொகை: சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் நீங்கள் தொடர்ந்து முதலீடுகள் செய்ய விரும்பினால் (அத்துடன் முதலீடு செய்வதற்கான லம்ப்-சம் தொகையைக் கண்டறிய விரும்பினாலும்), அவ்வப்போது செய்யப்படும் முதலீட்டுத் தொகையை வழங்கவும்.
  • எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம்: உங்கள் முதலீடுகளில் நீங்கள் எதிர்பார்க்கப்படும் சராசரி வருடாந்திர ரிட்டர்ன் விகிதத்தைத் தேர்வுசெய்யவும்.

இந்த விவரங்களை நீங்கள் வழங்கிய பிறகு, நீங்கள் எதிர்பார்த்த காலத்திற்குள் உங்கள் நிதி இலக்கை அடைய எவ்வளவு தொகை ‘லம்ப்-சம்’ ஆக முதலீடு செய்ய வேண்டும் மற்றும் SIP மூலம் தொடர்ந்து எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதை கால்குலேட்டர் காட்டும்.

ஸ்மார்ட் கோல் கால்குலேட்டரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தக் கால்குலேட்டரின் கணக்கைப் புரிந்துகொள்ள பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்.

ஓய்வு பெறும்போது ரூ. 1 கோடி வைத்திருக்க வேண்டும் என நீங்கள் இலக்கு வைத்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அடுத்த மாதம், நீங்கள் ரூ. 5 லட்சம் போனஸாகப் பெறுவீர்கள், இந்தத் தொகையை வைத்து உங்கள் ஒய்வுக்காலத்திற்குச் சேமிக்க விரும்புகிறீர்கள். எனினும், நீங்கள் ஓய்வு பெற இன்னும் 15 ஆண்டுகள் மட்டுமே உள்ளது எனில், உங்கள் இலக்கை அடைய இந்த லம்ப்-சம் தொகை மட்டுமே போதாது. இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியவருகிறது, ஆனால் இன்னொரு லம்ப்-சம் முதலீட்டைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. இதற்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானை (SIP) நீங்கள் தேர்வுசெய்து, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என்பதுதான் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

இப்போது, இந்தக் கேள்விகள் வரும்: உங்கள் ஓய்வுக்கால இலக்கை அடைய ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

ரூ. 1 கோடியை அடைவது தான் உங்கள் இலக்கு. நீங்கள் ஏற்கனவே ரூ.5 லட்சத்தை லம்ப்-சம் தொகையாக 15 வருடங்களுக்கு முதலீடு செய்துள்ளீர்கள், இதற்கு 12% ரிட்டர்னை எதிர்பார்க்கலாம். எனினும், உங்கள் தற்போதைய முதலீட்டின் அடிப்படையில் இறுதியில் ரூ. 27,36,782.88 கிடைக்கும் என கால்குலேட்டர் கணக்கிட்டுள்ளது, நீங்கள் எதிர்பார்த்த தொகையில் ரூ. 72,63,217.12 குறைவாக உள்ளது.

இப்போது, இந்தக் குறைபாட்டை மாதாந்திர SIP முதலீடுகள் மூலம் சரிசெய்யலாம். எதிர்பார்க்கப்படும் 12% ரிட்டர்ன் உடன் முதலீட்டுத் திட்டம் அதேமாதிரி இருக்கும்.

இந்த எண்களின்படி, நீங்கள் வைத்திருக்கும் இலக்கை அடைய மாதந்தோறும் ரூ. 14,539 தொகையை SIP முதலீடாக செய்ய வேண்டும் என்பதைக் கால்குலேட்டர் கணக்கிடுகிறது.

அதேபோல, SIP மூலம் முதலீடு செய்துகொண்டு, உங்கள் இலக்கை அடைவதில் சிரமம் இருப்பதாக உணர்கிறீர்கள், ஒரு லம்ப்-சம் தொகை மூலம் உங்கள் ஓய்வுக்கால முதலீடுகளுக்கு உதவ நினைக்கலாம். இந்த அனைத்து விவரங்களையும் கால்குலேட்டரில் வழங்கினால், நீங்கள் விரும்பிய காலத்திற்குள் தேவையான கூடுதல் லம்ப்-சம் தொகையைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவும். இதனால் சரியான நேரத்தில் நீங்கள் நினைத்த தொகையைச் சேர்ப்பதை உறுதிசெய்யும்.

பொறுப்புத்துறப்பு:

1. இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.

2. மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.

3. பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.