வெறும் ₹500 மூலம் என்ன ரிட்டர்னை நான் எதிர்பார்க்கலாம்?

Video

₹ 500 ஆக இருந்தாலும், ₹ 5 கோடியாக இருந்தாலும், ரிட்டர்ன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குழப்பமாக உள்ளதா?

சதவீதத்தின் அடிப்படையில் நீங்கள் ரிட்டர்ன்களை கருதுகின்ற பட்சத்தில், ரிட்டர்ன்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 12% ரிட்டர்ன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம், இரண்டு வருடங்களில் ₹ 500 முதலீட்டில் இருந்து ₹ 627.20 கிடைக்கும். ஒருவேளை, ₹ 1,00,000 முதலீடு செய்திருந்தால் அதே காலகட்டத்துக்கு ₹ 1,25,440 ரிட்டர்ன் கிடைக்கும். இரண்டு சூழல்களிலுமே ரிட்டர்ன் விகிதம் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆரம்பக்கட்ட முதலீட்டைப் பொறுத்து நாம் பெறுகின்ற இறுதித் தொகை மாறுபடுகிறது.

இங்கு நாம் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். முதலீடு செய்யப்படும் எந்தத் தொகைக்கும் ரிட்டர்ன்களின் சதவீதம் ஒன்றாகவே இருக்கும். எனினும், நீண்டகாலத்திற்கு முதலீட்டைத் தக்க வைக்கும் போது, இலாபமும் அதிகமாக இருக்கும்.

இந்த அனைத்துமே ஒரு முதலீட்டாளரின் கவனத்தைச் சிதறடிக்கக்கூடாது. முதலீட்டில் இது மிகவும் முக்கியமானது.

347

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?