இன்டெக்ஸ் ஃபண்ட்கள் என்பவை பிரபலமான சந்தைக் குறியீடுகளைப் பிரதிபலிக்கும் செயலற்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும். ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை உருவாக்க தொழிற்துறைகள் மற்றும் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் நிதி மேலாளர், செயல்திறனுடன் பங்களிக்க மாட்டார். ஆனால் பின்பற்ற வேண்டிய இன்டெக்ஸை உருவாக்கும் அனைத்து பங்குகளிலும் முதலீடு செய்வார். ஃபண்டில் உள்ள பங்குகளின் வெயிட்டேஜ், இன்டெக்ஸில் உள்ள ஒவ்வொரு பங்கின் வெயிட்டேஜுடன் நெருக்கமாகப் பொருந்திடும். இது, செயலற்ற முதலீடு, அதாவது ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும்போது இன்டெக்ஸைப் பார்த்து, அந்தப் போர்ட்ஃபோலியோவை எல்லா நேரங்களிலும் அதன் இன்டெக்ஸுடன் ஒத்திசைத்துப் பராமரிக்க நிதி மேலாளர் முயன்றிடுவார்.
இன்டெக்ஸினுள் உள்ள ஒரு பங்கின் வெயிட்டேஜ் மாறினால், இன்டெக்ஸுடன் இணைக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவில் அதன் வெயிட்டேஜைச் சமநிலையில் வைத்திருப்பதற்கு, பங்குகளின் யூனிட்களை நிதி மேலாளர் வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். செயலற்ற நிர்வாகத்தைப் பின்தொடர்வது எளிதானது என்றாலும், டிராக்கிங் எரர் காரணமாக, இன்டெக்ஸின் அதே ரிட்டர்னை இந்த ஃபண்டால் எப்போதும் வழங்க முடியாது.
இன்டெக்ஸின் செக்யூரிட்டிகளை ஒரே விகிதத்தில் வைத்திருப்பது எப்போதும் எளிதானது அல்ல. இதனால் டிராக்கிங் எரர் ஏற்படுகிறது, அவ்வாறு செய்யும்போது ஃபண்டின் மூலம் பரிவர்த்தனைச் செலவுகள் விதிக்கப்படும். டிராக்கிங் ஏரர் இருந்தபோதிலும், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கான ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாத, ஆனால் பரந்த சந்தைக்கு வெளிப்பாட்டைப் பெற விரும்புபவர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்கள் சிறந்தவை.