துறைரீதியான ஃபண்டுகள் என்பது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும், இது தொழில்நுட்பம், மருத்துவத்துறை, ஆற்றல், நிதிச் சேவைகள் போன்ற குறிப்பிட்ட துறைகள் அல்லது ஏதேனும் பிற துறைகளில் செயல்படும் வணிகங்களில் கவனம் செலுத்துகிறது. ஃபண்டுகளில் 80%-ஐ இந்தத் துறைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்கின்றனர், இந்தத் துறை நன்றாகச் செயல்படும்போது சாத்தியமான ரிட்டர்ன்களை வழங்குகிறது. எனினும், துறையில் மட்டும் கவனம் செலுத்துவதால் இந்த முதலீட்டு உத்தியில் மிக அதிகமான ரிஸ்க் உள்ளது.
துறைரீதியான ஃபண்டுகளின் பண்புகள்
துறைரீதியான ஃபண்டுகள் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, அதாவது இந்தத் துறைகளில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே முக்கியமாக முதலீடு செய்கிறது. இதில் கவனம் செலுத்துவது, இந்தத் துறை சிறப்பாகச் செயல்படும்போது மிக அதிகமான ரிட்டர்ன்களைப் பெற வழிவகுக்கும். எனினும், இந்தத் துறைகள் சரியாகச் செயல்படவில்லை எனில் அதிகமான ரிஸ்க்கையும் தரும். முடிவாக, இந்த ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன்கள் கணிக்கமுடியாதது, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளின் செயல்திறனைப் பொறுத்து மாறுபடலாம்.
துறைரீதியான ஃபண்டுகளின் நன்மைகள்
- ஒரே துறையில் டைவர்சிஃபிகேஷன் செய்வது ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் அல்லது அசெட்களில் முதலீடு செய்ய வழிவகுக்கும்.
- ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாகச் செயல்படும் வணிகங்களில் இந்த ஃபண்டுகள் கவனம் செலுத்துவதால் அதிகமான ரிட்டர்ன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சியின் மீது முழுமையான நம்பிக்கை இருந்து, அதிகமான ரிஸ்க் எடுப்பதை ஏற்றுக்கொண்டால், துறைரீதியான ஃபண்டுகளைக் கவனத்தில் கொள்ளலாம்.
பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.