நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் உத்தி பற்றி மேலும் அறிக

நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் உத்தி பற்றி மேலும் அறிக zoom-icon

நீண்ட கால முதலீடு எனும்போது, பல ஆண்டுகள் வரை அசெட்டுகளை வைத்திருக்க வேண்டியிருக்கும். கூட்டு வட்டி முறையில் தொடர்ந்து ரிட்டர்ன்கள் கிடைப்பதால் இந்த அணுகுமுறை மிகுந்த பலன் கொடுக்கக்கூடியது, மேலும் இது மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்தால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் இது உதவுகிறது, குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது.

செயல்திறன் மிக்க ஒரு நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் உத்தியைத் திட்டமிடுவதற்கு, மிகுந்த யோசனையுள்ள, கவனமான அணுகுமுறை தேவை. முதலில், உங்கள் நிதி இலக்குகளையும், கால வரம்பையும் வரையறுத்துக்கொள்ளுங்கள். உங்கள் முதலீடுகளின் நோக்கம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள், அது பணி ஓய்வுக்குத் திட்டமிடுவதாக இருக்கலாம், கல்விக்குப் பணம் சேர்ப்பதாக இருக்கலாம், செல்வம் சேர்ப்பதாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். அடுத்து, நீங்கள் சுமூகமாகக் கையாளக்கூடிய ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்க, உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனை மதிப்பிடுங்கள். கடைசியாக, உங்கள் இலக்குகள் மற்றும் ரிஸ்க் தாங்கும் திறன் இரண்டுக்கும் ஏற்ற வகையில், உங்கள் இலக்குகளுக்கு ஒத்துப்போகின்ற மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்ந்தெடுங்கள்.

உறுதியான மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவைக் கட்டமைப்பதில் டைவர்சிஃபிகேஷன் என்பது ஒரு முக்கியமான உத்தியாகும். வெவ்வேறு அசெட் வகைகளுக்கு இடையே முதலீடுகளைப் பரவலாக்குவதன் மூலம், ரிஸ்க் ஏற்படும் சாத்தியத்தை நீங்கள் குறைக்க முடியும், நீண்ட கால வளர்ச்சிக்கான சாத்தியத்தை மேம்படுத்த முடியும். இந்த அணுகுமுறை, மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களில் இருந்து உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வருடப்போக்கில் உங்கள் போர்ட்ஃபோலியோ நிலையாகவும் நீடித்தும் சிறப்பாகச் செயல்படும் நிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

கூட்டு வட்டியால் அதிக ரிட்டர்ன்கள் கிடைப்பதற்கான சாத்தியம் என்பது, நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள மற்றொரு முக்கியமான நன்மையாகும். நீண்ட காலவாக்கில், முதலில் நீங்கள் செய்த முதலீடு வருமானம் உருவாக்கித் தர வாய்ப்புள்ளது, பிறகு அந்த வருமானமும் மேலும் வருமானத்தை உருவாக்கித் தரும். தொடர்ந்து உங்கள் பணம் பெருகக் கூட்டு வட்டி உதவுகிறது, நீண்ட கால வாக்கில் சக்திவாய்ந்த வழிமுறையாகத் திகழ்கிறது.

நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நிதித் திட்டமிடலில், பல விதமான நோக்கங்களுக்கு ஏற்றவையாக உள்ளன. பணி ஓய்வுக்குத் திட்டமிடுவதற்கும், நீண்ட கால வாக்கில் நீடித்த வளர்ச்சியை வழங்குவதன் மூலம் போர்ட்ஃபோலியோவில் ஒரு முக்கியமான பகுதியை உருவாக்குவதற்கும் முக்கியமானவையாக உள்ளன. கூடுதலாக, மூலதன மதிப்பு அதிகரிப்பு (கேப்பிட்டல் அப்ரிசியேஷன்) அம்சத்தின் பயனால், கல்விக்குப் பணம் சேர்ப்பதில் இந்த முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செல்வம் சேர்ப்பது போன்ற விரிவான இலக்கைக் கொண்ட நபர்களுக்கு, சீரான, நிலையான வளர்ச்சியை வழங்க மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறந்த வழியாக விளங்குகின்றன.

குறிப்பிட்ட இலக்குகளில் கவனம் செலுத்தும் உத்திகள் மட்டுமில்லாமல், எதிர்பாராத சூழ்நிலைகளுக்குக் கைகொடுக்கும் ஆதாரமாக இருந்து, நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்த முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆகவே, நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் உத்தி என்பது நீண்ட கால வாக்கில், நீடித்த நிதி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை விரும்பும் நபர்களுக்கு ஏற்றது.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?