நமது சொந்த முதலீடுகளை நிர்வகிப்பது குறித்து சிந்திக்கும் போதே நம்மில் பலர் அச்சம் கொள்வதுண்டு. நிபுணத்துவ நிதி மேலாண்மை நிறுவனத்தில், அங்குள்ள ஊழியர்களுக்குஅவர்களின் கல்வி, அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
ஒரு முதலீட்டாளராக, நீங்கள் உங்கள் நிதியை நீங்களே நிர்வகித்துக் கொள்ளலாம் அல்லது ஒரு தொழில்முறை நிறுவனத்தை நாடலாம். பின்வரும் சூழல்களில் நீங்கள் ஒரு தொழில்முறை நிறுவனத்தை நாடலாம்:
- இதனை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று நீங்கள் அறியாமல் இருத்தல் - நம்மில் பலர் தங்களின் வருமான வரித் தாக்கலை செய்வதற்காக நிபுணரை நாடுவதுண்டு அல்லது நமது வீட்டை வடிவமைப்பதற்கு நம்மில் பெரும்பாலானோர் கட்டிட நிபுணரை ஏற்பாடு செய்வதுண்டு.
- உங்களுக்கு போதுமான நேரமோ அல்லது அவகாசமோ இல்லாமல் இருத்தல். நமக்கு வாகனம் ஓட்டத் தெரிந்தும், ஓர் ஓட்டுனரை நியமித்துக் கொள்வது போன்று.
- உங்கள் பணத்தைச் சேமிக்கும் செயலை நீங்கள் செய்யாமல், வெளியே ஒரு நபரிடம் ஒப்படைப்பதை போன்று. சொந்தமாக வாகனத்தை ஓட்டிச் செல்வதை விட, இரயிலில் பயணித்தால் செலவு மிச்சமாவதைப் போன்றது.
- உங்களுக்கு விருப்பமான/ பிடித்தமான பிற செயல்பாடுகளை நீங்கள் செய்யமுடியும்
நிபுணத்துவ நிதி மேலாண்மை என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் சிறந்ததொரு நன்மையாகும். இடதுபக்கம் உள்ள விளக்கப்படம் பிற அனைத்தையும் சிறப்பித்துக் கூறுகிறது. இந்த நன்மைகளின் காரணமாக, பிற முதலீட்டுத் துறைகளை ஒருவர் எதனால் பார்க்க வேண்டியதில்லை என்பது புரிந்திடும்.
344