முதலீடு செய்யத் தொடங்கியபிறகு எனது முதலீட்டுக் காலத்தை நான் மாற்ற முடியுமா?

Video

SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது அதிக நெகிழ்தன்மையை வழங்கிடும். இதில், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும் தொகை, காலகட்டம், அவர்கள் முதலீடு செய்ய விரும்புகின்ற கால இடைவெளி (வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டு போன்ற) ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். 

ஆனால், SIP -ஐ தொடங்கிய பின்பு, உங்கள் SIP காலகட்டத்தின் முடிவு வரை ஆரம்பத்தில் செய்த தேர்வுகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமா? 

இதற்கான பதில் ‘இல்லை’ என்பதே. உதாரணத்திற்கு, 7 வருட காலகட்டத்திற்கு ரூ. 5,000 தொகையில் ஒரு மாதாந்திர SIP -ஐ நீங்கள் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் காலகட்டத்தை உங்களால் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். அதேபோன்று உங்கள் நிதி நிலைமையைப் பொறுத்து SIP தவணையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ உங்களால் முடியும். உங்களுக்கு விருப்பமான சிறந்த நீண்டகால முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக SIP கள் உள்ளன. இந்த நெகிழ்தன்மையான அம்சங்கள், அவற்றை சிக்கலற்றதாகவும், பிற முதலீட்டுத் தேர்வுகளுடன் ஒப்பிடும் போது அதிக பணமாக்குதலையும் செய்கிறது.

உண்மையில், சீரான கால இடைவெளியில் SIP -ஐ புதுப்பிக்கின்ற மற்றும் நீட்டிக்கின்ற சிக்கலைக் குறைக்கிறது. மேலும் நீங்கள் நிரந்த SIP -ஐ தேர்ந்தெடுத்து, உங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை தொடர்ச்சியாக அதனைச் செலுத்தி வரலாம். உங்களுக்குத் தேவை ஏற்படும் சமயங்களில், உங்கள் SIP -ஐ தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. உங்கள் SIP -யின் காலகட்டம் முடிவதற்கு முன்பே, அதனை நீங்கள் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நிறுத்த விரும்பினால், அடுத்த SIP -யின் கெடு தேதிக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்பு ஒரு விண்ணப்பப் படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
 

344

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?