மியூச்சுவல் ஃபண்ட் (MF) முதலீடுகள் பற்றிய கட்டுரைகள் பொதுவாக நீண்ட கால இலக்குகளை நிறைவேற்றுவது பற்றி எடுத்துரைக்கின்றன. எனவே இயற்கையாகவே, முதலீட்டாளர்கள் குறுகிய கால இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்ட்கள் உதவாது என்று கருதுகின்றனர்.
இந்த கட்டுக்கதையை ரமேஷ் என்ற பயணப் பிரியரின் உதாரணத்துடன் உடைத்தெறிவோம்.
சமீபத்தில், ரமேஷ் அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனம் பணியில் வெற்றி முத்திரை பதித்து அதன் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியது. இந்த போனஸ் தொகையினை பயன்படுத்தி, ரமேஷ் ஐரோப்பா சுற்றுலா பயணத்தைத் திட்டமிட விரும்பினார்.
இருப்பினும், ரமேஷ் அவர்கள் ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அதனை செய்து முடிக்க எட்டு மாதங்கள் ஆகும். அந்த வேலை முடிவடைந்த பின்னரே அவர் ஐரோப்பா செல்ல முடியும். அதனால் எப்போது சுற்றுலா செல்லலாம் என்பதற்கான தேதியினை அவர் முடிவு செய்யவில்லை.
எனவே, ரமேஷ், முதலீட்டு காலம் குறைவாக இருப்பதாலும், சுற்றுலா செல்வாரா இல்லையா என்பது போன்ற நிச்சயமற்ற சூழலில் இருப்பதாலும், லிக்விட் ஃபண்டை பயன்படுத்த முடிவு செய்தார். எந்த வேலை நாளிலும் ஃபண்டில் செலுத்திய தொகையினை அவரால் எடுத்துக் கொள்ள முடியும். பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அடுத்த வேலை நாளில் அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும், இதனால் பணப்புழக்கம் எளிதாகிடும். சில ஃபண்ட் ஹவுஸ்கள் SMS அல்லது ஆப் மூலம் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையினை வழங்க அனுமதிக்கின்றன.
இதன் மூலம் அவர் சுற்றுலா செல்லும் முன்னர் வரை தன் பணத்தினை முதலீடு செய்து வருமானத்தினை அதிகரிக்க முடியும். பயணத்திற்குத் தயாராகி தங்குமிடம் மற்றும் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும் போது தேவைப்படும் தொகையினை மீட்டு எடுத்துக் கொள்ள முடியும். பயணத்தின் போது மீதமுள்ள பணத்தை அவர் வெளிநாட்டு கரன்சியாக வாங்கவும் மற்றும் அன்றாட செலவுகளுக்கு செலுத்தவும் பயன்படுத்தலாம்.
லிக்விட் ஃபண்ட்கள் மூலம் குறுகிய கால இலக்குகளுக்கான திட்டமிடல் எளிதாகிவிடும்.