நீண்டகாலம் முதலீடு செய்வதால் இருக்கும் பலன் என்ன?

நீண்டகாலத்துக்கு முதலீடு செய்வதிலான நன்மை என்ன? zoom-icon

நீண்டகாலத்துக்கு முதலீடு செய்திடுங்கள் – இது பல மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்களால் வழக்கமாக வழங்கப்படும் ஓர் அறிவுரை. குறிப்பாக ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு ஃபண்ட் போன்ற குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு இந்தக் கூற்று உண்மை.

நிபுணர்கள் எதனால் இதுபோன்ற அறிவுரையை வழங்குகின்றனர் என்று நாம் புரிந்துகொள்ளலாம். நீண்டகாலத்தில் என்ன நடக்கும்? நீண்டகாலத்துக்கு முதலீடு செய்வதால் ஏதாவது நன்மை உள்ளதா?

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக நினைத்திடுங்கள். சிறந்த பேட்ஸ்மேனுக்கு ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் பேட்டிங் இருக்கும். எனினும், பல வருடங்களாகத் தொடர்ந்து விளையாடிய அனுபவம் இருக்கின்ற சிறந்த பேட்ஸ்மேன் நிறைய ரன்கள் எடுத்திடுவார்.

நாம் “சிறந்த பேட்ஸ்மேன்” குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சிறந்த பேட்ஸ்மேனும் சில நல்ல மற்றும் மோசமான ஆட்டங்களை ஆடுவதுண்டு. சராசரியாக பார்க்கும்போது அவர் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பார்.

அதேபோன்றுதான், ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்டும் ஏற்ற இறக்கங்களை சந்திப்பதுண்டு - பெரும்பாலான இறக்கங்கள் ஃபண்ட் மேனேஜரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளால் இருக்கலாம். இந்த ஃபண்ட்ஸில் நீண்டகாலம் முதலீடு செய்வதன் மூலம் ஒரு முதலீட்டாளரால் பலனடைய முடியும்.

எனவே, உங்களால் இயலுகின்ற பட்சத்தில், நீண்டகாலத்துக்கு முதலீடு செய்திடுங்கள் - குறிப்பாக ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு ஃபண்ட்களில்.

344

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?