ESG ஃபண்டுகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

ESG ஃபண்டுகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை zoom-icon

ESG என்பது சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவை சார்ந்த நடைமுறைகள் ஆராய்ந்து மதிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளும் பத்திரங்களும் அடங்கும். இந்த வகையான முதலீடுகளைத் தேர்வுசெய்வதன் மூலம் நீங்கள் நிலையான லாபத்தையும் பொறுப்பான வணிக நடைமுறையையும் ஆதரிக்கிறீர்கள்.

ESG-இன் விளக்கம்

சுற்றுச்சூழல் (E): ‘E’ என்பது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறிக்கும். கார்பன் உமிழ்வு, கழிவு அகற்றும் நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின் ஆற்றலை உபயோகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.


சமூகம் (S): ‘S’ என்பது ஒரு நிறுவனம் அதன் பணியாளர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சமூகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளும் பங்களிப்புகளையும் குறிக்கிறது. பாலின சமத்துவம், நலத்திட்ட அமைப்புகள், சமூகத் தாக்கங்கள் ஆகியவை இதில் கருத்தில் கொள்ளப்படும்.


நிர்வாகம் (G): ‘G’ என்பது ஒழுங்குமுறை இணக்கம், விசில் புலோயர் கொள்கைகள், குறைதீர்க்கும் முறைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கார்ப்பரேட் நிர்வாகம் மதிப்பிடப்படும்.

இந்த விஷயங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கே ESG ஃபண்ட்ஸ் முன்னுரிமை அளிக்கும். ESG மியூச்சுவல் ஃபண்ட்ஸானது முதலீடு செய்வதற்கு முன்பு ESG ரேட்டிங் மூலம் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவை சார்ந்து நிறுவனத்தின் செயல்பாட்டை மதிப்பிடும். இந்த ரேட்டிங்குகள் பொதுவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் மூன்றாம் தரப்பு ரேட்டிங் ஏஜென்சிகள் கணக்கிடும். இதனால் முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் மதிப்புகளைப் பொறுத்து முதலீடுகளைத் திட்டமிட முடியும்.

ESG மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்
1. இணக்கத்தன்மை மதிக்கப்படும்: ESG காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இது உங்கள் தனிப்பட்ட மதிப்பை உயர்த்துவதாக இருப்பதுடன் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
2. நீண்டநாள் அடிப்படையிலான செயல்திறன்: ESG-இல் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் நீண்டநாள் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவை ஆகும். இது நிலையான முயற்சிகள் மற்றும் ரிஸ்க் நிர்வாகத்தால் அவர்களுக்குச் சாத்தியமாகிறது.
3. ரிஸ்க் குறைவு: ESG நடைமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களைத் தவிர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிர்வாக ரீதியான சிக்கல்கள் போன்ற ரிஸ்க்குகளை நிர்வகிக்க ESG மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உதவும்.


பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?