காலாண்டுதோறும் பே-அவுட்களை வழங்கும் ஃபண்டுகள் இருக்கின்றனவா?

காலாண்டுக்கு ஒருமுறை பணமளிக்கக் கூடிய ஃபண்ட்கள் ஏதேனும் உள்ளனவா?

உங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை நிர்வகிப்பதற்கு வழக்கமான வருமானத்தை பெறவேண்டும் என்று எதிர்பார்த்தால், மியூச்சுவல் ஃபண்ட்ஸிலுள்ள சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தை (SWP) நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பொருத்தமான திட்டத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை முதலீடு செய்து, ஒரு வருடம் கழித்து SWP -ஐ தொடங்குவது. இதன்மூலம், குறுகியகால மூலதன இலாப வரி விதிக்கப்படாது. நீங்கள் பெற விரும்பக்கூடிய தொகையையும், கால இடைவெளியையும் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு விருப்பமான போது அதனை மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் டிவிடென்ட் தேர்வை விட SWP -ஐ தேர்வே சிறந்தது ஏனென்றால் டிவிடென்ட் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் உங்கள் தொகை முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் இலாபத்தைப் பொறுத்து இவை இருக்கும். சந்தை இறங்குமுகமாக இருந்தால், அதன் போர்ட்ஃபோலியோவில் உங்கள் ஃபண்ட் இழப்பைச் சந்திக்கும். அதனால் உங்களுக்கு டிவிடென்ட்கள் எதுவும் கிடைக்காது. SWP -ஐத் தேர்வு செய்தால், திட்டம் இழப்பைச் சந்தித்தாலும் கூட, உங்களின் அசல் தொகையில் இருந்து நீங்கள் தேர்வு செய்த தொகை உங்களுக்கு கிடைக்கும். எனவே, SWP -ஐ தொடங்கும் பட்சத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை தொடக்கத்தில் முதலீடு செய்திடுங்கள். ஃபண்டில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ரிட்டர்ன்களை விட சற்று குறைவாக, அதாவது உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டு தொகையிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு (%) பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் உங்கள் அசல் தொகைக்கு எந்த பாதிப்பும் வராது.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?