பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பயத்தினை ஏற்படுத்தலாம், அதுவும் நீங்கள் புதியவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். எனினும், பரிசோதித்துப் பார்த்த முதலீட்டு உத்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக மாற்றுவதுடன் நீண்டகால சொத்து சேமிப்பிற்கும் உதவுகிறது:இதுவே SIPகள் அல்லது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) என்பதில் சீரான கால இடைவெளிகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு சிறிய தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். சீரான கால இடைவெளிகளில் சிறிய தொகையை சேமிப்பதால், உங்கள் நிதி இலக்குகளை எட்ட கூட்டு வட்டியின் ஆற்றலைப் பயன்படுத்த SIP உங்களுக்கு உதவக் கூடும்.
ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் சிறிய தொகை சில காலம் கழித்து குறிப்பிடத்தக்க முதலீட்டு போர்ட்ஃபோலியோவாக வளர்வதற்கான சாத்தியம் இருக்கிறது. சிக்கல் இல்லாத மற்றும் முறையாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு SIP ஒரு அருமையான முதலீட்டு வாய்ப்பாகும். உங்களுக்கு எந்தத் தயாரிப்பு/திட்டம் பொருந்தும் என்பது குறித்து தெரியவில்லை எனில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
பெரும்பாலும் SIPகளில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் சிக்கலானது என நினைத்து பலபேர் கைவிடுகின்றனர். இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து சரியான புரிதல் இல்லாததால், அவர்கள் முதலீடு செய்வதை ஓரம்கட்டிவிடுகின்றனர்.
எனினும், தாமதமாகச் செய்யப்படும் முதலீடுகளால் உங்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம்! ஒரு SIP-இல் மாதம் வெறும் ரூ.1,000 முதலீடு செய்கிறீர்கள் எனில், உங்கள் முதலீட்டினை இரண்டு வருடங்கள் தாமத்தித்து தொடங்கினால் உங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் தெரியுமா!
நம்பமுடியவில்லை தானே? இந்தக் கணக்கைப் பாருங்கள்!
நீங்கள் 25 வயதில் இருக்கிறீர்கள், வருடத்திற்கு 12% ரிட்டர்ன் தரும் ஒரு ஈக்விட்டி SIP-இல் மாதம் 1,000 ரூபாய் முதலீடாக 30 ஆண்டுகளுக்குச் செய்கிறீர்கள். சில காரணங்களால், இந்தத் திட்டத்தை அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்துத் தொடங்க முடிவெடுத்துள்ளீர்கள். உங்கள் முதலீட்டுத் தொடக்கம் 28 வயதாக மாறிவிடும். நீங்கள் பெறக்கூடிய சாத்தியமான ரிட்டர்ன்களைப் பின்வரும் அட்டவணை விளக்குகிறது. எனினும், இந்த ரிட்டர்ன்கள் அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை ஏற்றுக்கொள்வது அவசியம்.
விவரங்கள் |
25 வயதில் ஆரம்பித்தால் |
27 வயதில் ஆரம்பித்தால் |
முதலீட்டுக் காலம் |
30 |
28 |
மாதம்தோறும் முதலீடு செய்யும் தொகை |
Rs 1,000 |
Rs 1,000 |
முதலீட்டில் கிடைக்கும் ரிட்டர்ன் |
12% |
12% |
முதலீட்டுத் தொகை |
Rs 3,60,000 |
Rs 3,36,000 |
ரிட்டர்ன்களுடன் சேர்ந்த மொத்தத் தொகை |
Rs 35,29,914 |
Rs 27,58,585 |
தாமதமான முதலீட்டால் ஏற்படும் இழப்பு |
- |
Rs 7,71,329 |
* மேலே உள்ள கணக்கீடு விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
நீண்டகாலத்திற்கு டெப்ட் ஃபண்டில் SIP இருப்பது சந்தேகத்திற்குரியது. ஹைப்ரிட் ஃபண்ட்டாக கருதிக் கொள்ளலாம்
இதில் காட்டியுள்ளபடி, இரண்டு வருடங்கள் தாமதித்தால், நீங்கள் இழப்பது ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான தொகை! இப்போது நீங்கள் ஆண்டிற்கு 10% சராசரி ரிட்டர்ன் தரும் ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தாலும், தாமதமான முதலீட்டால் ஏற்படும் இழப்பு சில லட்சங்களில் இருக்கும்.
விவரங்கள் |
25 வயதில் ஆரம்பித்தால் |
27 வயதில் ஆரம்பித்தால் |
முதலீட்டுக் காலம் |
30 |
28 |
மாதம்தோறும் முதலீடு செய்யும் தொகை |
Rs 1,000 |
Rs 1,000 |
முதலீட்டில் கிடைக்கும் ரிட்டர்ன் |
10% |
10% |
முதலீட்டுத் தொகை |
Rs 3,60,000 |
Rs 3,36,000 |
ரிட்டர்ன்களுடன் சேர்ந்த மொத்தத் தொகை |
Rs 22,79,325 |
Rs 18,45,849 |
தாமதமான முதலீட்டால் ஏற்படும் இழப்பு |
- |
Rs 4,33,476 |
* மேலே உள்ள கணக்கீடு விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் இது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
கூட்டுவட்டியின் ஆற்றல்
கூட்டுவட்டியின் ஆற்றல் என்பது முதலீடுகளில் உள்ள ஒரு ஆற்றல். இது உங்கள் அசல் முதலீடு மற்றும் அதில் உருவாகும் வட்டியில் இருந்து உங்களுக்கு வட்டியைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. அதாவது, நீங்கள் சம்பாதிக்கும் தொகை குறிப்பிட்ட காலம் கழித்து அதிகப்படியான வேகத்தில் வளரும். இதன்மூலம் குறிப்பிடத்தக்க ரிட்டர்ன்களை உங்கள் முதலீடுகள் மூலம் அடைய வாய்ப்புள்ளது.
நீங்கள் முன்கூட்டியே தொடங்கினால், கூட்டு வட்டியின் விளைவு மிக ஆற்றல் மிக்கதாக இருக்கும், இது உங்கள் நிதி இலக்குகளை சுலபமாக அடைய உதவும். மேலுள்ள உதாரணங்களில் விளக்கப்பட்டுள்ளபடி, வெறும் இரண்டு ஆண்டுகள் தாமதிப்பதால் தாமதமான முதலிடுகளினால் ஏற்படும் இழப்பு மிக அதிகமாக இருக்கக்கூடும்.
இதனால் தான் நீங்கள் கூடிய விரைவில் முதலீடு செய்ய ஆரம்பிக்க வேண்டும். மாதம் வெறும் ரூ.1,000-இல் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் எனில், ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டை நீங்கள் கண்டறிய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிதானது மற்றும் சிக்கல் இல்லாதது. மாதந்தோறும் முதலீடுகள் செய்வதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஆன்லைனில் தானாக முதலீடு செய்யும்படி நீங்கள் அமைக்கலாம்.
கடைசியாக சில வார்த்தைகள்
மெதுவாகவும் உறுதியாகவும் சென்றால் போட்டியில் வெல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு சிறிய முதலீட்டில் நீங்கள் இன்று தொடங்கினாலும் கூட, எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
பொறுப்புதுறப்பு
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பல்வேறு வகைகள் பற்றி AMFI இணையதளத்தில் உள்ள தகவலானது, ஒரு நிதித் தயாரிப்பு வகை என்ற வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. விற்பனைக்காகவோ விளம்பரத்திற்காகவோ வணிக எதிர்பார்ப்பிலோ வழங்கப்படவில்லை.
இதிலுள்ள உள்ளடக்கம், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் தகவல் ஆதாரங்கள், நம்பகமானது என்று நம்பக்கூடிய வகையிலான பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் AMFI உருவாக்கியது. எனினும், அத்தகைய தகவலின் துல்லியத்திற்கு AMFI உத்தரவாதம் அளிக்காது, அந்தத் தகவல் மாறாது என்றும் உறுதியளிக்காது.
இதிலுள்ள உள்ளடக்கமானது, தனிப்பட்ட ஒரு முதலீட்டாளரின் நோக்கங்கள், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வம் அல்லது நிதி சார்ந்த தேவைகள்/சூழல்கள் அல்லது இங்கு விவரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் அவருக்குப் பொருந்தும் தன்மை போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்படவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் இது குறித்து முதலீட்டு ஆலோசனை பெற, தங்களது தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்/நிபுணர்/வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் என்பது டெபாசிட் செய்யும் தயாரிப்பல்ல, இவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது அதன் AMC-இன் பொறுப்பல்ல, மேலும் இவை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, காப்பீடும் வழங்குவதில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்பில் உள்ள முதலீடுகளின் தன்மையின் காரணமாக, அதன் ரிட்டர்ன்கள் அல்லது சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது. இதுவரையான பெர்ஃபார்மன்ஸ் பற்றிய தகவல் கொடுக்கப்படும்போது, அது முழுக்க முழுக்க தகவல் தேவைக்காக மட்டும்தானே தவிர, அது எதிர்கால பலன்களுக்கான உத்தரவாதமல்ல.
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.