முதலீடுகளில் புதுயுக டிஜிட்டல் டிரெண்டுகள்: அவற்றுக்கான செலவுகள் எப்படி இருக்கும்

முதலீடுகளில் தற்காலப் போக்குகள்: அவை எப்படித் திறம்படச் செயல்படுகின்றன

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நிதிச் சேவைத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று பணம் செலுத்துவது, வாங்குவது, முதலீடு செய்வது என அனைத்தையுமே நீங்கள் ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலமே செய்துவிட முடியும்.

இதனால், எளிதில் வர்த்தகம் செய்யக்கூடிய,  இயல்வடிவில் இல்லாத விர்ச்சுவல் அசெட்டுகள் போன்ற டிஜிட்டல் போக்குகளும் உருவாகியுள்ளன. இவை அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்படுவதோ வழங்கப்படுவதோ இல்லை. ஆகவே, பணமாகவோ சட்டப்பூர்வ பணமதிப்புப் பொருளாகவோ இவற்றைப் பயன்படுத்த முடியாது. எனினும், இதுபோன்ற சில ரிஸ்க்குகள் உள்ளன:

-    இதுபோன்ற டிஜிட்டல் அசெட்டுகளின் மதிப்பு உண்மையான அசெட்டுகளோடு இணைந்தது அல்ல. இதன் விளைவாக, இவற்றின் மதிப்புகளும் அதாவது உங்கள் முதலீடும் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்களுக்கு உட்படலாம்.
-    விர்ச்சுவல் அசெட்டுகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுபவை அல்ல. அரசாங்க ஒழுங்குமுறைப்படுத்தல் இல்லாததால், முதலீட்டாளர்கள் மோசடி ஆபத்துகளுக்கு உட்பட்டு பணமிழக்கும் அபாயம் உள்ளது.
-   தற்போது, ஒன்றிய பட்ஜெட் 2022-இன் படி இந்த விர்ச்சுவல் அசெட்டுகள் அதிக அளவு வரி விதிப்புக்கு உட்படுகின்றன.

இவற்றோடு ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டுகள், 1924 முதல் இருந்து வருகின்றன கடந்த நூறாண்டுகளில், முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக MFகள் சிறப்பாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன, நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருக்கின்றன. பல்வேறு ரிட்டர்ன் மற்றும் ரிஸ்க் அளவை விரும்புபவர்களுக்கு ஏற்ப பல்வேறு வகை ஸ்கீம்களும் உள்ளன. அதோடு, இயல்பிலேயே இவை டைவர்சிஃபை செய்பவை, இதனால் முதலீட்டாளர்களின் ரிஸ்க் குறைகிறது. எல்லா முதலீட்டு முறைகளையும்விட மியூச்சுவல் ஃபண்டுகள் மிகக் குறைந்த அளவு வரி விதிப்புக்கு உட்படுபவை என்பது கூடுதல் சிறப்பு. (மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி இங்கு படித்துத் தெரிந்துகொள்ளலாம்.)

புதிய போக்குகளுக்கு என்று எப்போதுமே ஒரு ஈர்ப்பு சார்ந்த மதிப்பு இருக்கும். அதன் காரணமாக அவை முதலீட்டாளர்களைக் கவர்பவையாகத் தோன்றக்கூடும். ஆனாலும், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் முன்பு ரிஸ்க்குகளை ஆராய்ந்து பார்க்க வேண்டியது முக்கியம். ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வகை உங்கள் ரிஸ்க் தெரிவுக்கும் ரிட்டர்ன் எதிர்பார்ப்புகளுக்கும் பொருத்தமாக இருக்கிறதா என்று நன்றாக ஆறாய்ச்சி செய்து பார்த்து முடிவு செய்யுங்கள். முதலீட்டு முடிவுகள் என்பவை வாழ்க்கை முடிவுகள், எதையும் தேர்வு செய்வதற்கு முன்பு அதற்கென்று நேரம் ஒதுக்குவது அவசியமானது.
 

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?