மியூச்சுவல் ஃபண்டுகள் vs ஷேர்கள்: வேறுபாடு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் vs பங்குகள்: இவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?

இரவு உணவுக்காக நீங்கள் எங்கிருந்து காய்கறிகளை வாங்குவீர்கள்? அவற்றை நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்ப்பீர்களா அல்லது அருகிலுள்ள கடை/சூப்பர்மார்க்கெட்டில் உங்களின் தேவைக்கேற்றபடி வாங்குவீர்களா? காய்கறிகளை நீங்களே வளர்த்து அறுவடை செய்வது ஆரோக்கியமான உணவை உண்பதற்கான சிறந்த வழி என்றாலும், அவற்றை வளர்ப்பதற்கு விதை, உரம், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சிக் கட்டுப்பாடு போன்றவற்றில் நேரத்தையும், முயற்சியையும் செலவிட வேண்டும். கடையில் வாங்குவதன் மூலம், நீங்கள் கடினமாக உழைக்காமல் பரந்த அளவிலான காய்கறிகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று, நல்ல நிறுவனங்களின் பங்குகளில் நேரடியாக முதலீட்டை மேற்கொள்வது அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் அவற்றில் முதலீடு செய்து, முதலீட்டை பெருக்கிக் கொள்ள முடியும். நிறுவனப் பங்குகளை நாம் வாங்கும் போது, கிடைக்கும் பணத்தை, அவை வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றன. அதனால் நம் முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கிறது.

பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது என்பது ஒப்பீட்டளவில் அதிக அபாயம் கொண்டது. நிறுவனம் மற்றும் துறையை ஆராய்ந்து பார்த்த பின்பே அதன் பங்குகளை நீங்கள் வாங்க வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களில், இருந்து ஒருசில நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரும் பணி. அவ்வாறு தேர்ந்தெடுத்த பின்பு, ஒவ்வொரு பங்கின் செயல்திறனையும் நீங்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில், நிபுணத்துவம் வாய்ந்த ஃபண்ட் மேனேஜர்கள் பங்குகளைத் தேர்ந்தெடுத்திடுவர். ஃபண்டின் செயல்திறனை நீங்கள் கண்காணிக்க வேண்டுமே தவிர, ஃபண்டில் உள்ள தனித்தனிப் பங்குகளைக் கண்காணிக்க வேண்டியதில்லை. பங்கு முதலீட்டில் கிடைக்காத குரோத்/டிவிடென்ட் தேர்வுகள், டாப் அப், சிஸ்டமேட்டிக் வித்டிராயல்/டிரான்ஸ்பர் போன்ற முதலீட்டு நெகிழ்தன்மையை, நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நீங்கள் பெற முடியும். அதுமட்டுமல்லாது, வழக்கமான முறையில் SIP -யில் சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதற்கும் இது உதவிடும்.

344

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?