ஈக்விட்டி ஃபண்ட்களைப் பாதிக்கின்ற ரிஸ்க்குகளில் முக்கியமானது மார்க்கெட் ரிஸ்க் ஆகும். ஸ்டாக் மார்க்கெட் முழுவதையுமே பாதிக்கின்ற வகையிலான பல்வேறு காரணங்களால் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடையும் ரிஸ்க்கையே மார்க்கெட் ரிஸ்க் என்கிறோம். இதனால் மார்க்கெட் ரிஸ்க்கை சிஸ்டமேட்டிக் ரிஸ்க், அதாவது டைவர்சிஃபை செய்து தவிர்க்க முடியாத ரிஸ்க் என்றும் அழைக்கின்றனர்.
மார்க்கெட் ரிஸ்க்கை பாதிக்கின்ற பல்வேறு காரணிகள் உள்ளன, அவை: மேக்ரோஎக்கனாமிக் போக்குகள், உலகப் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார இறுக்கம் அல்லது ஒழுக்க விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை. ஈக்விட்டி விலை ரிஸ்க் என்பது மார்க்கெட் ரிஸ்க்கின் மிகப்பெரிய பகுதியாகும். இதுவே ஈக்விட்டி ஃபண்ட்களை அதிகம் பாதிக்கிறது. மார்க்கெட் வீழும்போது, எல்லா பங்குகளின் விலைகளும் பாதிக்கப்படும், இதன் காரணமாக, எந்த ஒரு ஈக்விட்டி ஃபண்டின் செயல்திறனும் பாதிக்கப்படும். மார்க்கெட் ரிஸ்க்குக்குக் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமின்றி, மார்க்கெட் ரிஸ்க்கின் ஒரு பகுதியான கரன்ஸி ரிஸ்க்காலும் ஈக்விட்டி ஃபண்ட்கள் பாதிக்கப்படலாம். பல நாடுகளில் வணிகம் நடத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஃபண்ட்களில் கரன்ஸி ரிஸ்க்கால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஈக்விட்டி ஃபண்ட்கள் பல்வேறு துறை அல்லது பிரிவுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதால், அந்தந்தத் துறை சார்ந்த ரிஸ்க்குகளால் அவை பாதிக்கப்படலாம். அதாவது அந்தத் துறையில் சாதகமற்ற சூழ்நிலை உருவாவது, அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை மோசமாகப் பாதிக்கலாம் என்ற நிலைப்பட்டால், அந்தத் துறையில் முதலீடு செய்துள்ள ஈக்விட்டி ஃபண்ட்கள் பாதிக்கப்படும். நிர்வாகத்திலோ, நிறுவனக் கொள்கையிலோ நிகழ்ந்துள்ள மாற்றம் போன்ற சாதகமற்ற சூழல் உருவாவதாலும் ஈக்விட்டி ஃபண்ட்கள் பாதிக்கப்படலாம். இது, நிறுவனம் சார்ந்த ரிஸ்க் எனப்படுகிறது. துறை மற்றும் நிறுவனம் சார்ந்த ரிஸ்க்குகளை அன்சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்றும் அழைக்கிறோம். இவற்றை டைவர்ஸிஃபிகேஷன் செய்வதன் மூலம் குறைக்க முடியும்.