மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறுகிய காலத்துக்கானதா அல்லது நீண்டகாலத்துக்கானதா?
“குறுகிய காலத்துக்கான நல்ல முதலீட்டுத் திட்டமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இருக்கலாம்.”
“ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை பொருத்தவரை, நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். முடிவுகளைப் பெறுவதற்கு காலம் எடுக்கும்.”
ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ள மேற்கண்ட இரண்டு கூற்றுகளையும் மக்கள் வழக்கமாக கேட்பதுண்டு.
எனவே, மியூச்சுவல் ஃபண்ட்ஸுக்கு பொருத்தமான காலகட்டம் எது? குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா?
அது ஒருவரின் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்தது. பெரும்பாலான இலக்குகள் காலத்தைச் சார்ந்து இருக்கின்றன. குறுகிய காலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும், நீண்டகாலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும், மற்றும் இடைப்பட்ட காலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும் உள்ளன.
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர் அல்லது முதலீட்டு ஆலோசகருடன் ஆலோசித்து, உங்களின் நிதி இலக்குகள் குறித்து கலந்துரையாடிய பின்னர், எதில் முதலீடு செய்வது என்பதைத் நீங்கள் தீர்மானித்திடுங்கள். உதாரணத்திற்கு:
- நீண்டகால முதலீடு எனில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் - வழக்கமாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள்.
- நிலையான வருமானம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் எனில் -
- லிக்விட் ஃபண்ட்ஸ் - குறுகிய காலகட்டத்துக்காக – 1 வருடத்துக்கும் குறைவாக
- குறுகியகால பாண்ட் ஃபண்ட்கள் – நடுத்தர காலகட்டத்துக்காக – 1 முதல் 3 வருடங்கள் வரை.
- நீண்டகால பாண்ட் ஃபண்ட்கள் - நீண்டகாலத்துக்காக – 3 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல்
வருடங்கள் மற்றும் அதற்கும் மேல் எங்கள் இணையதளத்தைப் பார்வையிடும் போது, பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்வீர்கள். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்/முதலீட்டு ஆலோசகர் உங்கள் இலக்குகளின்படி முதலீடு செய்ய சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினை கண்டறிய உங்களுக்கு உதவலாம்!