ஷார்ட் டெர்ம் டெப்ட் செக்யூரிட்டிகளில் 3-6 மாதங்கள் வரையிலான மெக்காலே காலத்தில் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகள் முதலீடு செய்யப்படுகின்றன. இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு, ரிஸ்க் குறைவான உத்திகளின் மூலம் லிக்விட் ஃபண்டுகளைவிடச் சற்று அதிகமான ரிட்டர்ன்களை வழங்கலாம். மாறுபடும் வட்டி விகிதத்தால் முதலீடு இழப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து குறுகிய காலத்திற்குள் ரிட்டர்ன்களை உருவாக்குவதுதான் இதன் முக்கிய நோக்கம். குறுகிய கால மெச்சூரிட்டி டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், நீண்டகால பாண்டு அல்லது ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, ரிஸ்க் குறைவானதாகக் கருதப்படுகிறது.
அல்ட்ரா-ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகளின் பண்புகள்:
1. ஷார்ட்-டெர்ம் டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு
அல்ட்ரா-ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகள் என்பது கமர்ஷியல் பேப்பர்கள், டெபாசிட் சான்றிதழ்கள், பிற பணச் சந்தை கருவிகள் போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் ஆறு மாதங்கள் வரையிலான மெக்காலே காலத்தில் முக்கியமாக முதலீடு செய்யும் குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.
2. அதிக லிக்விடிட்டி
குறுகிய கால ஃபண்டு நிர்வாகத்தில் எளிதாகச் சேர்வதையும் வெளியேறுவதையும் இந்த ஃபண்டுகள் வழங்குகிறது. வழக்கமாக வெளியேறுவதில் இருக்கும் சிக்கல்கள் இதில் இல்லை.
3. மிதமான ரிட்டர்ன்கள்
ரிஸ்க் குறைவான நிலையில் இருந்துகொண்டே லிக்விட் ஃபண்டுகளைவிடச் சற்று அதிக ரிட்டர்ன்களை வழங்க அல்ட்ரா-ஷார்ட் டியூரேஷன் ஃபண்டுகள் முயற்சி செய்கின்றன. இது ரிஸ்க் குறைவானது, குறைவான ரிட்டர்ன் தரும் தயாரிப்பு.
அல்ட்ரா ஷார்ட்-டெர்ம் டெப்ட் ஃபண்டுகள் குறுகிய காலத்தில் உபரி ஃபண்டுகளில் தற்காலிகமாக முதலீடு செய்ய ஏற்றது.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.