இந்த நவீன காலத்தில் மிகவும் சிறந்த முதலீட்டு வழியாக மியூச்சுவல் ஃபண்ட் இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்களை நிர்வகிப்பது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்களின் எல்லா விஷயங்களையும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) நிர்வகிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் துறையில் வெளிப்படைத்தன்மையையும், நியாயமான போக்கையும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு கடுமையான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் SEBI விதித்துள்ளது.
SEBI 1988-இல் நிறுவப்பட்டது, இது 1992-ஆம் ஆண்டின் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா துணைச் சட்டத்தின் மூலம் இது அதிகாரம் பெறுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு அறக்கட்டளை வடிவில் உருவாக்கப்படுகிறது, அதற்கென்று ஸ்பான்சர், ட்ரஸ்டீகள், அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC), கஸ்டடியன் ஆகிய தரப்புகள் உண்டு. அறக்கட்டளையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பான்சர்களால் நிறுவப்படுகிறது. இந்த ஸ்பான்சர்களே நிறுவனத்தின் புரொமோட்டர்கள் போன்றவர்கள். மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்ஹோல்டர்களின் ஆதாயத்திற்காக, அதன் சொத்துகளை ட்ரஸ்ட்டீகளே வைத்திருப்பார்கள். பல்வேறு வகை செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதன் மூலம் SEBI அங்கீகாரம் பெற்ற AMC இதன் ஃபண்ட்களை நிர்வகிக்கிறது. SEBI-இல் பதிவுசெய்திருக்க வேண்டிய கஸ்டடியன் எனும் தரப்பு, ஃபண்டின் பல்வேறு ஸ்கீம்களின் செக்யூரிட்டிகளை தனது வசம் வைத்திருக்கும். AMC-ஐ மேற்பார்வையிடும் மற்றும் இயக்கும் அதிகாரம் ட்ரஸ்ட்டீகளுக்கு இருக்கும். மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறன் மற்றும் SEBI ஒழுங்குமுறைகளுக்கு இணங்கும் தன்மை ஆகியவற்றை இவர்கள் கண்காணிக்கின்றனர். SEBI-இன் ஒழுங்குமுறைப்படி, குறைந்தபட்சம் ட்ரஸ்ட்டீ நிறுவனத்தின் அல்லது போர்டு ஆஃப் ட்ரஸ்ட்டீஸின் மூன்றில் ஒரு பங்கினர் சுயசார்புள்ளவர்களாக இருக்க வேண்டும். அதாவது அவர்கள் ஸ்பான்சர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடாது. அது மட்டுமின்றி, இயக்குநர்களில் 50% பேர் சுயசார்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பொதுவாக SEBI இவற்றைப் பார்த்துக்கொள்கிறது:
பதிவு மற்றும் அங்கீகரிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் SEBI-இல் பதிவுசெய்யப்பட வேண்டும். அதன் ஒவ்வொரு ஸ்கீம்களின் மூலமும் அது மக்களிடம் இருந்து நிதி திரட்டிக்கொள்ள முடியும்.
முதலீட்டாளர் பாதுகாப்பு: நியாயமான மற்றும் அறநெறிக்குட்பட்ட நடைமுறைகளை உறுதிப்படுத்திக்கொள்ள SEBI வழிகாட்டுதல்களை அமைக்கிறது.
தகவல் வெளிப்படுத்தல் தேவைகள்: SEBI அவ்வப்போது அமைக்கும் தகவல் வெளிப்படுத்தல் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட்கள் பின்பற்ற வேண்டும்.
நடத்தை நெறி: நெறிப்படியான செயல்பாடுகளையும் தொழில்முறைத் தரநிலைகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, மியூச்சுவல் ஃபண்ட்கள், ஃபண்ட் மேனேஜர்கள், மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் உள்ள பிற முக்கிய அதிகாரிகளுக்கு நடத்தை நெறிகளை SEBI இயற்றியுள்ளது.
அவ்வப்போது சரிபார்த்தல் மற்றும் புதுப்பித்தல்: மாறுகின்ற மார்க்கெட் நிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை அமைப்பானது உறுதியாகவும், தகுந்த எதிர்வினையாற்றுவதாகவும் இருப்பதை SEBI உறுதிப்படுத்திக்கொள்கிறது.
தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் கவனித்தல்: மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்குகின்றனவா என்று அவற்றை SEBI தொடர்ந்து கண்காணிக்கிறது, கவனிக்கிறது. ஏதேனும் ஒழுங்குமுறைகள் மீறப்படும்பட்சத்தில் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, அபராதம் விதிப்பது, அறிவுறுத்தல் ஆணைகளை இடுவது ஆகியவற்றைச் செய்ய அதற்கு அதிகாரமுள்ளது.
செக்யூரிட்டிகளில் முதலீடு செய்பவர்களின் நலனைப் பாதுகாக்கவும், செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டை ஒழுங்குமுறைப்படி நடத்தவும் தகுந்தது என்று தான் கருதும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மேற்கூறிய எல்லா செயல்களும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவால் மேற்கொள்ளப்படுகின்றன.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.