எனது முதலீடுகளின் பதிவுகளை யார் வைத்திருப்பது?

என் முதலீடுகளின் பதிவுகளை யார் வைத்திருப்பார்? zoom-icon

இந்தியாவிலுள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸும் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியாவால் (SEBI) ஒழுங்குமுறைபடுத்தப்படுகிறது. சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMC) மற்றும் பாதுகாவலர்களின் பங்குகளையும் பொறுப்புகளையும் மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குமுறைகள் தெளிவாக விளக்குகின்றன. முதலீட்டைச் செய்வதற்கு முன்பு அனைத்து முதலீட்டாளர்களும் பயனுறு KYC செயல்முறையை முடிப்பது என்பது முக்கியமானது. எனவே, உண்மையான முதலீட்டாளர்கள் தங்களின் செல்லுபடியாகக் கூடிய PAN கார்டு கொண்டு மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யமுடியும். இந்த முதலீட்டாளர்கள் தங்களின் வங்கி விவரங்களையும் வழங்கவேண்டும், இதனால் அனைத்து பணமெடுத்தல்களும் நேரடியாக முதலீட்டாளர்களின் சொந்தக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அறங்காவலர் வாரியத்தால் AMCகள் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றில் சிலர் சார்பிலா தனிநபராக இருக்கவேண்டும் என்றும் SEBI வலியுறுத்துகிறது. பாதுகாப்புகள் மற்றும் இணக்கத்தின் பல்வேறு நிலைகளை இந்த அறங்காவலர் வாரியம் உறுதி செய்திடும்.

தொகையானது தவறாகக் கையாளப்படாமல் இருப்பதையும், நோக்கத்தில் இருந்து திசைமாறிச் செல்லாமல் இருப்பதையும், யாரும் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடாமல் இருப்பதையும் ஒழுங்குமுறைகளும் பாதுகாப்புகளும் உறுதிபடுத்துகின்றன.

349

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?