பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் என்பது என்ன?

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் என்பது என்ன?

டைனமிக் அசெட் அலொகேஷன் ஃபண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்ற, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் என்பவை ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு வகையாகும். இந்த ஃபண்டுகள் நிலையான அலொகேஷன் கட்டுப்பாடு இல்லாமல், ஈக்விட்டி டெப்ட் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்கின்றன. மார்க்கெட் நிலவரங்களின் அடிப்படையில் ஈக்விட்டி மற்றும் டெப்ட் இவை இரண்டிற்கு இடையே தேர்வு செய்யும் நெகிழ்த்தன்மை ஃபண்டு மேனேஜர்களுக்கு உள்ளது. 

மற்ற ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளைப் போல இல்லாமல், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் மார்க்கெட்டில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு எதிர்வினை புரியும் வகையில் ஈக்விட்டி மற்றும் டெப்ட் கலவையை நிகழ்நேரத்தில் மாற்றக் கூடியவை, இவை ஸ்கீம் ஆஃபர் ஆவணங்கள் மற்றும் SEBI (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) ரெகுலேஷன்ஸ், 1996க்கு உட்பட்டவை.

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்