எனது பணத்தை எவ்வளவு அடிக்கடி எடுக்கலாம்?

என் பணத்தை எவ்வாறு வெளியே எடுப்பது?

ஒரு ஓப்பன் எண்டட் திட்டத்தில் இருந்து பணத்தை வெளியே எடுப்பதற்கு முதலீட்டாளருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சில சூழல்களில், வெளியேற்றக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு, வழங்கப்படும் இறுதித் தொகையில் இருந்து கழிக்கப்படலாம். அனைத்து ஓப்பன் எண்டட் திட்டங்களும் எளிதில் பணமாக்குவதற்கான சிறந்த நன்மையை வழங்குகின்றன.

பணமாக்குவதிலான முடிவு, முற்றிலும் முதலீட்டாளரின் சுயவிருப்பத்தின் பேரிலானது. எவ்வளவு முறை வேண்டுமானாலும், எந்த அளவு வேண்டுமானாலும் பணத்தை வெளியே எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. பணமாக்குவதற்கான போதுமான யூனிட்கள் கணக்கில் இருந்தால் போதும். பணமாக்க இயலுவதற்கான குறைந்தபட்சத் தொகை திட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வங்கி அல்லது நிறுவனத்தின் கீழ் பிணையமாக இருக்கும் யூனிட்களை, பிணையம் அகற்றப்படும் வரை பணமாக்க முடியாது. அறங்காவலர் வாரியத்தின் தீர்மானத்தின்படி, அசாதாரணச் சூழல்களின் கீழ் மட்டுமே பணமாக்குதல் கட்டுப்படுத்தப்படலாம்.

குளோஸ்டு எண்டு திட்டங்களை அவற்றின் முதிர்வின் போது மட்டுமே AMC -யில் இருந்து பணமாக்க முடியும். எனினும், ஓர் அங்கீகரிக்கப்பட்ட பங்குப் பரிவத்தனைக்கு யூனிட்களை விற்பதன் மூலம் முதிர்வுக்கு முன்பு எந்த சமயத்திலும் பணமாக்கிக் கொள்வதற்கான வழியையும் அவை வழங்குகின்றன.

பின்வருவனவற்றில் பணமாக்குதலைச் செய்யமுடியும்;

  • முதலீட்டாளர் சேவை மையங்கள் (ISC)
  • AMC அலுவலகங்கள்
  • பரிவர்த்தனையை ஏற்கக்கூடிய அதிகாரப்பூர்வ மையங்கள் (OPAT)
  • அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் இணையதளத்தின் மூலம்.
349

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?