மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் என்ன மாதிரியான நிதி இலக்குகளைப் பூர்த்திசெய்ய முடியும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் கொண்டு நான் என்னென்ன வகையான நிதி இலக்குகளைப் பூர்த்தி செய்ய முடியும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸின் சிறந்த அம்சம் என்னவென்றால், உங்கள் நிதி இலக்கு என்னவாக இருந்தாலும், அதற்கான பொருத்தமான திட்டத்தை உங்களால் அதில் இருந்து கண்டறிய முடியும் என்பதுதான்.

உங்கள் ஓய்வு காலத்திற்குத் திட்டமிடுவது அல்லது உங்கள் குழந்தையின் எதிர்காலக் கல்விக்காகத் திட்டமிடுவது போன்ற நீண்டகால நிதி இலக்குகளுக்கு, நீங்கள் ஈக்விட்டி ஃபண்ட்ஸை கருதலாம்.

வழக்கமான வருவாயை எதிர்காலத்தில் உருவாக்கக் கருதினால், ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸை நீங்கள் கருதலாம்.

உங்களுக்குத் திடீரென்று ஓர் ஒட்டுமொத்தத் தொகை கிடைக்கிறது. நீங்கள் அதனை எதில் முதலீடு செய்யவேண்டும் என்று இன்னும் தீர்மானிக்காத பட்சத்தில், அதனை லிக்விட் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யக் கருதலாம். உங்கள் செயல்பாட்டு மூலதனத்தை முதலீடு செய்வதற்கு, சேவிங்க்ஸ் கணக்கு அல்லது நடப்புக் கணக்கைக் கருதுவதை விட, லிக்விட் ஃபண்ட் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

வரிகளைச் சேமிப்பதற்கான சிறந்த முதலீட்டுத் தேர்வுகளையும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்கு வழங்குகிறது. ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டங்கள் (ELSS) இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக அனைத்து முதலீட்டுத் தேவைகளுக்குமான ஒரே இடமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திகழ்கிறது.

350

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?