நீங்கள் ஒருமியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பின்னர், பரிவர்த்தனை தேதி, முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வாங்கப்பட்ட யூனிட்களின் விலை மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள யூனிட்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் உங்களுக்கு ஒரு கணக்கு அறிக்கை வழங்கப்படும்.
ஒரே கணக்கில் உங்களால் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் அதற்கான அறிக்கை தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒரு வழக்கமான கணக்கு அறிக்கையில், சில பரிவர்த்தனைகள் (பெரும்பாலும் 10) பட்டியலிடப்பட்டிருக்கும். – அதில், பர்சேஸ், ரிடம்ஷன்; டிவிடென்ட்கள், அல்லது வர்த்தகமல்லாத பரிவர்த்தனைகள் பற்றியும் குறிப்பிடபட்டிருக்கும். உங்கள் கணக்கு அறிக்கையில், இருப்பில் உள்ள யூனிட்களின் எண்ணிக்கை, சமீபத்திய தேதியின் NAV மற்றும் உங்கள் முதலீட்டின் தற்போதைய மதிப்பு ஆகியவை காட்டப்பட்டிருக்கும்.
ஏதேனும் ஒரு கணக்கு அறிக்கையைத் தொலைத்துவிட்டால், சிக்கலேதும் இன்றி எந்த சமயத்திலும் அதனை உங்களால் பெற முடியும். கணக்கு அறிக்கை தொலைந்து போய்விட்டால், நீங்கள் எதிர்காலப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாமல் போகும் நிலையோ அல்லது உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க இயலாமல் போகும் நிலையோ ஏற்படாது.