பலவகைகள் இருப்பது வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்திடும். அதேசமயத்தில், வெறுமனே நீங்கள் பல வகைகளை விரும்பப் போவதில்லை. சூழலுக்குத் தேவை என்பதால், சில வகைகள் தேவையாக உள்ளது. எனவே, நீங்கள் உணவு சாப்பிடும் போது, சமநிலையைப் பராமரிக்க வேண்டும். உணவுகள், உடலின் சில அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும்.- அவை முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன: உங்களுக்கு ஆற்றல் வேண்டும், உங்களுக்கு பலம் வேண்டும், உங்களுக்கு நல்ல கண்பார்வை வேண்டும் - இவற்றை எல்லாம் நீங்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களான கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின்கள், புரதங்கள் போன்றவற்றில் இருந்து பெறுவீர்கள். இவற்றை உணவு உங்களுக்கு வழங்குகிறது. அதே சமயத்தில், ஒற்றை உணவில் இருந்து நீங்கள் இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற்றிட முடியாது. இதனால் உங்கள் தினசரி உணவில் பல வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, வெவ்வேறு முதலீட்டாளர்களின் வெவ்வேறு தேவைகளை நிறைவேற்றும் வகையில் வெவ்வேறு முன்மொழிவுகளுக்கான வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.
முதலீடுகளில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற அடிப்படைத் தேவைகளை நாம் இப்போது பார்க்கலாம். ஒரு முதலீட்டாளருக்கு பின்வரும் நான்கு விஷயங்களின் கலவை தேவை: (1) முதலீட்டின் பாதுகாப்பு, (2) வழக்கமான வருவாய், (3) எளிதில் பணமாக்குதல், (4) முதலீடு செய்யப்பட்ட தொகையின் பெருக்கம்.
இது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. மேலும் அறிவதற்கு, இடதுபுறம் உள்ள அட்டவணையைப் பாருங்கள்.