ஈக்விட்டி பகுதியில் இருந்து வளர்ச்சி மற்றும் மூலதனப் பெருக்கத்தை வழங்குவதையும், அதோடு டெப்ட் பகுதியில் இருந்து வருமானம் மற்றும் நிலைத்தன்மையை வழங்குவதையும் இலக்காகக் கொண்ட ஒரு பேலன்ஸ்டு ஃபண்டை நாம் கருதலாம். இருந்தபோதிலும், ஈக்விட்டி பகுதி சுமார் 60% வரை இருப்பதால், இந்தத் திட்டத்தில் கணிசமான அளவிலான அபாயம் உள்ளது. அதிக அபாய ஏற்புமை கொண்ட மற்றும் நீண்டகால முதலீட்டைச் செய்ய விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோன்ற திட்டத்தின் நிதி மேலாண்மைக் குழு, குறைந்தது 3 வருடங்கள் முதலீட்டைத் தக்க வைக்கின்ற நீண்டகால முதலீட்டாளர்களை மட்டுமே விரும்பிடும். இதன்மூலம், 3 வருடங்களுக்கு முன்பு செய்யப்படும் அனைத்து பணமாக்குதல்களுக்கும், ஃபண்டின் மதிப்பில் 1% வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம். இவ்வாறு, 3 வருடங்களுக்கு முன்பு பணமாக்குபவர்களுக்கு கட்டணங்களை விதிப்பதன் மூலம் ஃபண்டை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறாமல் இருக்கச் செய்கிறது.
அனைத்து முதலீட்டாளர்களையும் நீண்டகாலம் தக்க வைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தின் ஆதாயம் உள்ளது. இதனை மனதில் கொண்டு ஃபண்ட் மேனேஜர் செக்யூரிட்டிகளைத் தேர்ந்தெடுத்திடும் வசதியையும் இது வழங்கிடும். இதுபோன்ற உத்தியால், குறுகிய கால முதலீட்டாளர்கள் யாருமின்றி மற்றும் பணமாக்குதலின் காரணமாக நீண்டகால உத்தி பாதிக்கப்படாமல், ஃபண்ட் மேனேஜரின் கண்ணோட்டத்தில் ஃபண்டின் செயல்திறன் மேம்பட்டிடும்.